Halloween party ideas 2015
.

கிருத்துவர்களை இழிவாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக ராமேஸ்வரம் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த 2013ம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மதம் குறித்தும், அவர்களது புனித நூலான புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு குறித்தும் சீமான் விமர்சனம் செய்து பேசியதாக கூறப்படுகிறது.

அந்தக்காணொளி  தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தக்காணொளியைப்  பார்த்த ராமேஸ்வரம் பகுதி கிருத்துவ அமைப்பினர் கோபத்தில் சீமானுக்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். "கிருத்துவ மக்களின் புனித நூலான பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடுகளை கேவலப்படுத்தியும், கிருத்துவத்தின் அடிப்படை புனித ஆத்மார்த்த தத்துவமான 'திவ்ய நற்கருணை' உட்கொள்வதை இழிவுபடுத்தி பேசிவரும் தமிழ் உணர்வுகளை பணத்திற்காக அடகு வைக்கும் போலித்தமிழன் சீமானை காவல்துறையே.. தமிழக அரசே... கைது செய்" போன்ற வாசகங்களுடன் ராமேஸ்வரம் தீவு கிருத்துவ மக்கள் கூட்டமைப்பு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளன. சீமான் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும். அப்படி பெறவில்லை என்றால், நாங்கள் அடுத்தக்கட்டமாக சீமான் உருவப்பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோம் என்று கிருத்துவ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Powered by Blogger.