Halloween party ideas 2015
.

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும், தனது தந்தை சொந்தப் பணத்தை செலவு செய்தே எம்எல்ஏ ஆனார் என்றும், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மகன் சிவராம் பேசியுள்ளார். தனது நண்பர்களுடன் மது அருந்தும்போது பேசிய வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.

கடந்த 4ந் தேதி அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் நாகர்கோவில் தொகுதியில் டான்சி சாம்சன் அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர் புதன்கிழமை வேட்பாளர்கள் பட்டியல் மாற்றத்தில் நாகர்கோவில் தொகுதியில் நாஞ்சில் முருகேசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மகன் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வராது என பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Powered by Blogger.