Halloween party ideas 2015
.

மதிப்பிற்குரிய தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரே ,நாட்டின் நான்காம் தூணான பத்திரிகையாளர்களே, அரசியல்வாதிகளை அரியனையில் அமர வைக்கும் அன்பான பொதுமக்களே வணக்கங்களுடன்  உங்களுடையே ஒருத்தியாக வாழ்ந்து வரும் சாமானியான கயல்விழி செல்வக்குமார் எழுதிக்கொள்வது.
   நான் இந்து மறவர் சமூகத்தை சேர்ந்தவள்.எனது தந்தை மலைச்சாமி மல்லிகா பரமக்குடியில் ஹீரோ ஹோண்டா ஏஜென்சி சாய்ராம் மோட்டார் என்கிற நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.எனது அம்மாவின் உடன் பிறந்த தம்பி ராமநாதபுரம் முன்னாள் அதிமுகவின் மாவட்ட செயளாலர், இன்று மாவட்ட எம்.ஜி.ஆர் இளைங்கர் அணி செயலாளராக இருக்கும் முனியசாமி.அவரது மனைவி கிரித்திகா பரமக்குடி நகராட்சி தலைவராக இருக்கிறார்.முதுகுளத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்று உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்.அவரைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்!
நான் மதுரையில் பொறியியல் படிப்பு படித்து வந்த பொழுது தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரை காதலித்து மதுரை தல்லாகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2003 பிப்ரவரி19 ம் தேதி பதிவுத்திருமணம் செய்து கொண்டேன்.
இதை ஏற்றுக்கொள்ளாத என் தாய்மாமா முனியசாமி  என்னை தூக்கி வந்து பரமக்குடியில் வீட்டு சிறை வைத்தார்.எனது கணவரை மிரட்டி டைவர்ஸ் செய்து விடும் படி அடித்து கொடுமைப்படுத்தி டைவர்ஸ் ஆவணத்தில் கையெழுத்து கேட்டனர்.எனது கணவர் கையெழுத்து போடவில்லை.அதன் பிறகு மறுநாள் என்னை வீட்டில் இருந்து நள்ளிரவில் அழைத்துச்சென்று பாம்பன் பாலத்தில் வைத்து அடித்து ஆணவ கொலை செய்து தூக்கிப்போட திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த பொழுது நான் அவர்களிடம் தப்பி வந்துவிட்டேன்.
     நானும் எனது கணவரும் பல்வேறு இடங்களில் உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்த பொழுது மதுரையில் வசித்து வந்த செல்வக்குமாரின் சகோதரி,சகோதரர் உள்பட அவரின் ஒட்டு மொத்த குடும்பத்தையும்
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து எங்கள் சமூகத்தை சேர்ந்த காவல் உதவி ஆணையர் ஹேமப்பிரமிளா இவரது கணவர் கருணாகரன்  IAS ,DIG சந்திர சேகர் ( பெண்ணிய வாதியும், கவிஞரான தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர்) மதுரை காவல் ஆனையாளர் கந்தசாமி தேவர்  ஆகியோரின் உதவியோடும்,அதிமுக கட்சியில் இருந்த பதவி பலத்தை வைத்து இல்லீகல் கஸ்டடியில் 20 நாட்களாக வைத்து பயங்கரமான சித்திரவதைகள் செய்தனர்.அதன் பிறகு பத்திரிகைகள்,மனித உரிமை ஆனையம்,நீதிமன்றத்தின் உதவியோடு அவர்களை மீட்டோம்.
சட்டங்களை மதிக்காத எனது மாமாவும் அப்பாவும் உயிருக்கு பயந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் யாருக்கும் தெரியாமல் தனிக்குடித்தனம் செய்து கொண்டியிருந்த என்னையும் எனது கணவரையும்  கொலை செய்ய வந்தனர்.பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்களின் உதவியுடன் பர்தா போட்டு ஓடி ஒரு முஸ்லீம் சகோதரர் வீட்டில் ஒளிந்து உயிர் பிழைத்தேன்.மூன்று மாத கருவுற்ற நிலையில் நான் பல்வேறு மன உளைச்சலால் உயிர்பிழைத்து தப்பித்து  முதல் குழந்தையை பெற்ற பொழுது ரத்தசகதியில் இருந்த அந்த குழந்தையை தூக்க சொந்தமென்று யாரும் இல்லை. பெற்ற குழந்தையை தூக்கவும்,என்னை பார்க்கவும் ஓடி வந்து உதவியது அக்கம் பக்கத்து உறவுகளான சாமனிய பெண்களும்,உங்களில் கலந்த்திருக்கும் பொதுமக்களாகிய சாமனிய மனிதர்கள்தான்.அன்பில்தான் இந்த உலகம் இயங்கிறது என்று நான் உணர்ந்து கொண்ட தருணம் அது!
    அந்த நல்ல இதயங்களின் உதயியையும், நன்றியோடு என்றும் நான் மறவேன்! பாதிப்படிப்பில் நின்றது எனது வாழ்க்கை.
  இப்பொழுது நான் அண்ணா பல்கலைக்கழக த்தில் M.E ,படித்து மேற்க்கொண்டு PhD யும் படித்து ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக சென்னையில் பணியாற்றி வருகிறேன்.என்னுடைய இந்த வளர்ச்சிக்கு முழுக்காரணம் எனது கணவர் செல்வக்குமார்தான். காதலித்து ஓடியவர்கள் எல்லாம் சமூகத்தில் ஜெயிக்க முடியாது என்ற பொய் அறைகூவல்களை பொய்யாக்க எண்ணற்ற துயரங்களையும்,துன்பங்களையும் எதிர்த்து போராடி
ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகளோடு இந்த சமூகத்தில் எந்த வித  உறவுகள் இல்லாமல் கடந்த 13 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன்.

      நல்ல நிலைக்கு நான் வந்த பொழுது ,எனது அம்மா,அப்பாவிடமும் நான் போனில் பேசி பழையதை மறந்து ஒன்று சேரலாம் என்று நினைத்து அதற்க்கான முயற்சிகள் எடுக்கும் பொழுதெல்லாம் மீண்டும் மீண்டும் சாதியை சொல்லி என் குடும்பத்துடன் சேரவிடாமல் செய்கிறார் எனது தாய் மாமா முனியசாமி.நானும் எவ்வளவோ இறங்கி வந்து மன்றாடியும் சாதி வெறிபிடித்து அலைகிறார் முனியசாமி.எனது இரு குழந்தைகளையும் பாசத்தோடு வாரி அனைத்து கொஞ்ச ஆசையோடு இருப்பதாக வாஞ்சையோடு என்னிடம் போனில் பேசினார் என்பதற்காக வயதில் முதியோர் என்றும் பார்க்காமல் எனது அம்மாவை அடித்து விட்டார் எனது மாமா முனியசாமி.
    " எனக்கென்று யாருமில்லை, உங்களால் நான் உங்களுக்காகவே நான் " என்று போகுமிடமெல்லாம் அடிக்கடி பேசும் கருனையுள்ளம் கொண்டே முதல்வர் அம்மாவே உங்களிடம் தாயுள்ளத்தொடு கேட்கிறேன் உங்கள் மகளாகவே கேட்கிறேன் 13 ஆண்டுகளாக பெற்ற மகளை துரத்தும் சாதி வெறிபிடித்த ஒருவரை எப்படி உங்கள் கட்சியில் வைத்திருக்கிறீர்கள்? தேர்தலில் சீட்டு கொடுத்து அழகும் பார்க்கிறீர்களே அம்மா இது தகுமா ? அனைத்து சமூகத்தின் பாதுகாவலராக இருக்கும் உங்கள் காலடியில் சாதி வெறிபிடித்த ஓநாய் ஒன்று அமர்ந்து உங்கள் நிழலில் பாதுகாப்பாக வலம் வருவதோடு, பல அப்பாவி ஆடுகளின் ரத்தத்தை குடித்து கொண்டியிருப்பதை எப்படி அம்மா நீங்கள் ரசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

             இப்படிப்பட்ட நபர் எப்படி அனைத்து சமூகம் கொண்ட மக்களின் பிரதிநிதியான இருப்பார் என்ற கேள்விக்கான விடையின் பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன் அம்மா ".
எனது தம்பியின் மடியில் உட்கார வைத்து எனது பிள்ளைகளுக்கு மொட்டையடிக்க வேண்டும் என்று ஆசையில் இன்னமும் பரமக்குடிக்கு போனாலும் எனது தாய்மாமா முனியசாமி என்னை துரத்திக்கொண்டு இருக்கிறார்.13 ஆண்டுகளாக சாதி வெறிபிடித்தவர்களின் துரத்தலில் ஓடிக்கொண்டியிருக்கிறோம் நானும் எனது குடும்பத்தினறும்!
   இப்படி சாதி வெறிபிடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? சிந்திப்பீர் மக்களே! 
இப்படிக்கு
அன்பிற்காக தவித்து நிற்கும் உங்களில் ஒருத்தி
கயல்விழி ME.PhD
90037-88399

Post a Comment

Powered by Blogger.