Halloween party ideas 2015
.

தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சியிலிருந்து 6  புதுக்கல்  தொலைவில் உள்ள ,
நேர்மை மிகு ஆட்சிப் பணியாளர் உ.சகாயம் அவர்களால் வழங்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள, ஒரே சமையல் , ஒரே குடும்பம் என்ற கோட்பாட்டில் பல குடும்பங்கள் ஒன்றிணைந்து பெருங்கூட்டுக் குடும்பமாக வாழுகிற,

பொது உடைமை வாழ்வு (Community Life) என்ற அடிப்படையில் இயங்குகிற,
திருமணத்தை மற்றவர் நலனுக்காகப் புறக்கணித்து, முதிர் கன்னியாக, ஈக வாழ்வு நடத்தும் மகேசு என்ற நேர்மையின் இலக்கணமாக வாழ்பவரால் இயக்கப்படுகிற,

இதே போல ஈக  ஒப்படைப்புள்ள பெண்மணிகளை உறுப்பினர்களாகக் கொண்ட,
குறைந்தது ஒரு வார அளவாவது பொது நலனுக்காகப் போராடிச் சிறை சென்றிருக்க வேண்டும் என்ற விதியுடன் உறுப்பினர்களை ஏற்கிற,  செங்கொடியூரில்  சென்ற மாதம் சாதி புறக்கணிப்பு காதல் திருமணம் செய்த வன்னியர் சாதி சந்தியா - தாழ்த்தப்பட்ட அட்டவணை சாதி சிவராமன் ஆகியோருக்கு திருமணம் செய்துவைத்த மக்கள் மன்ற தோழர்களை நேற்று 19/04/16 இரவு பெண் வீட்டார் ஏற்பாட்டில் 7 குண்டர்கள் கத்தியுடன் வந்து, தாக்கியுள்ளனர். 

இதில் தஞ்சை தமிழனுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.  தொடர்ந்து ஊழல், இலஞ்சம், மணல், மலை,  கொள்ளைகளுக்கு எதிராகவும், பாதிக்கப்படும் நலிந்த பிரிவு மக்களுக்கு ஆதரவாகவும் பல போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மன்ற உறுப்பினர்களுக்கு சமூக விரோதிகளால் அச்சுருத்தல் இருப்பதால், அங்கு ஒரு சி.சி. டி.வி. (CCTV) வைப்பது தேவை என உணர்கிறோம். 

இதற்காக சுமார் ரூபாய் 40,000 (603$) தேவைப்படுகிறது. நல்ல  உள்ளம் கொண்டோர் நிதி கொடுத்து உதவ முன்வாருங்கள்.  

இது தொடர்பாக பேச எனது கைப்பேசி எண் 9789433344 மின்னஞ்சல்  lawyerrajendiran@gmail. com.   நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.... நீங்கள் அந்த நல்லோராக இருங்க...










paypal direct link: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=M548VL3D4WFMY

Post a Comment

Powered by Blogger.