Halloween party ideas 2015
.

பாலஸ்தீனம் - இஸ்ரேலில் சில நாட்கள்

(இக் கட்டுரை ஒரு பயணம் பற்றியதே, சமயங்கள் பற்றிய துஅல்லா)
 

. வி. கிருபாகரன், பிரான்ஸ்


சிறுபராயத்திலிருந்து வந்துள்ள ஆசைகளில் ஒன்று - இயேசு நாதர் பிறந்து, வளர்ந்து, சிந்தனைகள், போதனைகள், விவதாங்கள் நடாத்தி இறுதியில் கிறீஸ்தவ மதத்தை உருவாக்கிய இஸ்ரேல் நாட்டின் - புராதன நகரங்களான நாசரத், பெத்தலகேம், ஜெருசலாம் ஆகிய இடங்களுடன், மிக நீண்டகாலமாக தொடர் கதையாகி வரும் பாலஸ்தீனம் - இஸ்ரேலின் அரசியல் நிலவரங்களை நேரில் பார்வையிட வேண்டும் என்பது -  இவை இறுதியாக மிக அண்மையில் நிறைவேறியது.
 
இயேசு நாதரின் புனித ஸ்தலாங்களை முற்று முழுதாக பார்வையிட, வழிபட விரும்பிய யாரும், இஸ்ரேல் நாட்டின் குடிவரவு இலாகவையோ, விதிமுறைகளையோ, யூத பட்டினங்களையோ, இஸ்ரேலின் பணத்தையோ அலட்சியம் செய்ய முடியாது. இவ் யாத்திரையை, பயணத்தையை, மனத் துணிவு இல்லாத யாராலும் மேற்கொள்ள முடியாது. காரணம் இவ் பயணத்தின் பொழுது, சில ஆபாத்துக்களையும், கஸ்டங்களையும் எவ்வேளையிலும் சந்திக்கும் நிலை எவருக்கும் உருவாகலாம். நாம் இவ் விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர், எமக்கு வேண்டிய சிலர், உங்களிற்கு தற்போதைய நிலையில், இவ் விஜயம் முக்கியமானதா? என கேள்வி எழுப்பினார்கள்.
 
ஐரோப்பாவிலிருந்து நாலு மணி நேர விமான பயணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டின் ரெல் அவி விமான நிலையமான, “பென் குறினை சென்றடைந்தோம். இஸ்ரேல் நாட்டின் முதலாவது பிரமர் டேவிற் பென் குறினின் பெயரை இவ் விமான நிலையத்திற்கு சூட்டியுள்ளார்கள். அங்கு குடிவரவு இலாக உத்தியோகத்தர்களிற்காக காத்திருக்கும் பயணிகள் சிலர், ஒரு வித பீதியில் காணப்பட்டார்கள். ஆனால் நாம் விமான நிலையத்திலிருந்த வேளையில் அங்கு எந்தவித அசாதரண நிலையையும் காணவில்லை. ஆனால் திரும்பி வரும் வேளையில், இவ் விமான நிலையத்தின் கண்காணிப்பு, பாதுகாப்பு என்பது மிக கடுமையானது என்பதை எம்மால் அவதானிக்க அனுபவிக்க முடிந்தது.

மத்திய கிழக்கில் ஈராக், ஓமான் நாட்டை தவிர்ந்த மற்றைய நாடுகளிற்கு பலதடவைகள் பயணித்தவன் என்ற முறையில், ஒரு உண்மையை கூற வேண்டும். அதாவது இஸ்ரேல் விமான நிலையத்தின் வரவேற்பு முறைகள், மற்றைய மத்திய கிழக்கு நாடுகளை விட மிகவும் பண்பானதும், ஏற்று கொள்ளக் கூடியதுமானது. சவூதி அரேபியாவின் சுங்க இலாவினர், பயணிகளின் பொதிகளை சோதனை செய்து, இஸ்லாம் மதம் தவிர்ந்த மற்றைய மாத வழிபாட்டு பொருட்களை கண்டு பிடித்தால், அவற்றை நேரடியாக குப்பை தொட்டிகளிற்குள் விசிவிடுவார்கள். அது மட்டுமல்லாது, ‘மாக்சன் ஸ்பென்சரின் கடையின்சென் மைக்கல் உடுப்புக்களை கண்டால், அவற்றையும் குப்பை தொட்டிகளிற்குள் எறிந்து விடுவார்கள்.
 

ஜெருசலாத்தில் பழைய நகர்

ஜெருசலாத்தில் பழைய நகரில், ஓர் கன்னியர் மடத்தின் விடுதியில் தக்கினோம். இம் மண்டபத்தின் கூரையின் மேல் பகுதியில் நின்று பார்த்தால், பழைய நகரின் சுற்றுப்புறங்கள் முழுவதையும் பார்க்க முடிகிறது. பழைய நகரில், நான்கு வேறுபட்ட வழிபாட்டு முறைகளை கொண்டமுஸ்லீம்கள், கிறீஸ்தவர்கள், ஆர்மேனியர்கள், யூதர்கள் வாசித்து வருகிறார்கள்.

யூதர்களின் புனித வழிபாட்டு இடமான மேற்கத்திய மதில், முஸ்லீம்களின் அல் அக்சா மசூதி போன்றவற்றுடன் ஆர்மேனியர், கிறீஸ்தவர்களது தேவலாயங்களை ஜெருசலாத்தின் பழைய நகரில் பார்க்க முடிந்தது.

முஸ்லீம்களை பொறுத்வரையில், சவூதி அரேபியாவில் மேக்கா, மேதின மசூதிகளுக்கு அடுத்து,  ஜெருசலாத்தில் உள்ள அல் அக்சா மசூதி திகழ்கிறது.

ஜெருசலாத்தின் பழைய நகரின் மூலை முடுக்குகள் எல்லாம், இஸ்ரேலிய காவல்துறையும், இராணுமும் இரவு பகலாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை காணக் கூடியதாகவிருந்தது. இஸ்ரேலிய இராணுவத்தில், வேறு இனத்தவர்கள், விசேடமாக ஆபிரிக்க இனத்தவர்கள் கடமை புரிகிறார்கள். எமது விஜயத்தின் பொழுது அங்கு எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.


அல் அக்சா மசூதி உள்ள இடத்திற்கு, முஸ்லீம் அல்லாதோர், ஞாயிற்று கிழமைகளில் மட்டும், காலை வேளையில் இரு மணித்தியாலங்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாம் சென்றிருந்த வேளையில், ஓர் யூத குடும்பம், அங்கு வருவதை அவதானித்த முஸ்லீம்கள், உடனடியாக, ‘அல்லாகோ அக்பர் என கூச்சலிட ஆரம்பித்தனர். ஜெருசலாத்தின் நாளாந்த நடைமுறைகளை தெரியாத ஒருவருக்கு, இவையாவும் ஜெருசலாத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமாக கணிப்பார்கள்.

ங்கு வெள்ளி கிழமைகளில், சிலுவை பாதம் பிரான்ஸிஸ்கன் சபையின் தலைமையில், பழைய நகரில் உள்ளவிய டொலோறோசா’ என்னும் வீதிக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டு, இயேசு சிலுவையில் அறையபட்டு, அவரது கல்லறையை கொண்டுள்ள (Holy Sepulchre) கல்லறை தேவாலயம்அல்லதுபுனித செபுக்கா தேவாலயத்தை சென்றடைகிறது. இவ் தேவலாயத்தில், உலகின் பல பாகங்களிலிருந்து வந்துள்ள சகல இன மக்களையும் காணக்கூடியதாகவுள்ளது.

இஜேசு நாதரும் ஞானஸ் ஞானமும்

நாசராத்தில் இயேசுவின் தாயார், மேரியின் தேவலாயம், இயேசு பிரான் சிறு பராயத்தில் பழகிய சென்ற இடங்களை பார்க்க கூடியதாவிருந்தது. ஆதனை தொடர்ந்து, கலியாக் கடல் (Sea of Galilee), புனித பேதுரூவின் இல்லம், (தற்பொழுது தேவாலாயம்), முதன்மையான தேவலாயம் (Church of the Primacy) ஆகியவற்றை பார்வையிட்டோம். இஜேசு நாதர் ஞானஸ் ஞானம் (திரு முழுக்கு) பெற்றதாக கூறப்படும் ஜோடான் ஆற்றம் கரைக்கும் சென்றிருந்தோம்.

உண்மையில், இஜேசு நாதர் ஞானஸ் ஞானம் பெற்ற உறுதியான நிட்சயமான இடமாக, ஜோடான் நாட்டில், சாக்கடல் (Dead Sea) அருகே உள்ள ஜோடான் ஆறு திகழ்கிறது. சில வருடங்களிற்கு முன், ஜோடானில் ஓர் மாகாநாட்டிற்கு சென்ற சமயம், இவ் விடத்தை சென்று பார்வையிடும் சந்தர்ப்பம்  எனக்கு கிடைத்தது. ஜோடான் நாட்டில் பாயும் ஜோடான் ஆறு, மிகவும் குறுகியதாகவும், நீரோட்டம் குறைந்ததாகவும் காணப்பட்டது. அவ்வேளையில் எம்மை அவ்விடத்திற்கு அழைத்து சென்ற ஜோடனிய சுற்றுலா வழிகாட்டி, “இஸ்ரேலியர்கள் தமது விவசாயத் தேள்வைகளிற்காக ஜோடான் ஆற்றின் நீரை வழி மறித்துள்ளதனால் அங்கு நீரோட்டம் குறைந்து காணப்படுவதாககூறினார். அன்று அவர் கூறிய விளக்கத்தின் உண்மையை, இம்முறை இஸ்ரேல் சென்ற சமயம், நேரில் காணக் கூடியதாகவிருந்தது. இஸ்ரேலில் பாயும் ஜோடான் ஆறு மிகவும் அகலமானதாகவும், தொடர்ந்து நீர் வளம் கொண்டதாக காணப்பட்டது. இப் பிரதேசத்தில், மாமரம், வழை மிகவும் செறிந்து காணப்படுகிறது.

ஜெருசலாத்தில் பழைய நகரில் உள்ள புனித அன்னம்மாள் (Church of St Anne) தேவலாயம் பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்தின் கீழ் நடைபெறுகிறது. இங்கு பிரான்ஸ் கொடி பெரிதாக பறக்கவிடப்பட்டிருப்பதுடன், ஜெருசலாத்தின் பல இடங்கள் பிரான்ஸின் செல்வாக்குள்ள இடங்களாக காணப்படுகிறது. புனித அன்னம்மாள் தேவலாயம் உள்ள இடத்திலேயே இயேசுவின் தயார் மேரி பிறந்தாக கூறப்படுகிறது.

இவற்றுடன், இயேசு நாதர் இறுதி இராப் போசனம் (last Supper room) உட் கொண்ட அறையையும் (Cenacle); பார்வையிட்டோம்.

ஜெருசலாத்தில் பழைய நகரின் கிழக்கு பக்கமாக, உள்ளஒலீவ் மலையில் (Mount of Olives) இயேசு நாதர் சில வேளைகளில் ஒய்வெடுத்து கொள்வதாக கூறப்பட்ட பொழுதிலும், இவ்விடத்திலிருந்தே இயேசு  இறுதியாக ரோம சிப்பாய்களினால் சிறைபிடிக்கப்பட்டார். இவ் பகுதியில் யூதர்களின் மிக பாரீய மயானம் காணப்படுகிறது. இதன் எதிர் புறத்தில் முஸ்லீம்களின் மயானம் உள்ளது.

பாலஸ்தீனிய விடுதலை வீரனும், ஜனதிபதியுமான ஜாசீர் அரபாத், 2004ம் ஆண்டு காலமாகிய வேளையில், இவரது பூதவுடலை அல் அக்சா மசூதிக்கு அருகாமையில் அல்லது ஜெருசாலத்தில் புதைப்பதற்கு பாலஸ்தீனியர்கள் விரும்பினார்கள். அவ்வேளையில், இஸ்ரேலின் பிரதமராக விளங்கிய ஆரியல் சரோன், அவ் வேண்டுகோளை நிராகரித்தார். இதன் காரணமாக, அரபாத்தின் பூதவுடல், பாலஸ்தீன பகுதியான ரமால எனும் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளது.

விஜயத்தின் சோகம்

எமது விஜயத்தின் மிகவும் சோகம் வாய்ந்ததாக, பெத்தலகேலுக்கான விஜயம் அமைந்தது. காரணம், இஸ்ரேலியர்களினால் கட்டப்பட்டுள்ள மிக உயரமான மதில்கள், அங்கு வாழும் மக்களிடையே பாரீய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சுதந்திரம், வார்த்தகம், வேலை வாய்ப்பு யாவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலியர்களினால் பல மைல்கள் துரத்திற்கு கட்டப்பட்டுள்ள மதில்கள்,  பாலஸ்தீனர்கள் மீதான அடக்கு முறையின் உச்சக்கட்டம் எனலாம்.

பாலகன் இயேசு பிறந்துள்ள பெத்தலகேம் நகரில் வாழும் மக்கள், அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு வாழுகிறார்கள் என்பது மிகவும் கவலை தரும் செய்தியாகும். பாலகன் இயேசு பிறந்துள்ள இடம், தேவாலாயம் (Church of Nativity), உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த தேவலாயமாகும். இயேசு பிறந்ததாக கூறப்படும் இடத்தையும், அதிலிருந்து ஓர் இரு யார் தூரத்தில், அவர் அன்று குழந்ததைய இருந்த இடத்தையும் பார்வையிட்டோம்.

இதேவேளை, புரட்டஸ்தான் சமயத்தவர்களினால், கல்லாறையின் பூங்கா (Garden Tomb) எனக் கூறப்படும் தேவாலயமும் ஜெருசாலமில் உள்ளது. இவற்றின் வேதாகமக் கதைகளிற்கும், ஜெருசலாத்தில் உள்ள மற்றைய தேவலாயங்களின் கதைகளிற்கும் இடையில் நிறைய வேறுபடுகள் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் உள்ள எந்த வியாபார ஸ்தபனங்களிலும் பொருட்களிற்கும் விலை பட்டியல் கிடையாது. இதனால் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. நன்றாக பேரம் பேசக் கூடியவர்கள் சென்றால், வர்தகர்கள் கூறும் விலையில் சரி அரைவாசி விலைக்கு பொருட்களை வாங்க கூடிய சந்தர்பங்களும் உண்டு. ஆனால் உலகின் பல பாகங்களிலிருந்தும் இவ்வளவு பெரும் திரளான யாத்திரிகர்கள் விஜயம் செய்யும் இடத்தில், ஒர் விலை பட்டியல் இல்லை என்பது இவ் நாட்டின் மதிப்பை குறைகிறது. விலை பட்டியல் என்பது ஒர் நாட்டிற்கும், வார்தகர்களிற்கும், வாடிக்கையாளர்களிற்கும் நன்மைகளை ஏற்படுத்தும்.
 
பாலஸ்தீனியர்களது பிரதேசம்

நாம் பார்வையிட்ட பிரதேசங்களில், பெத்தலகேம், ரமால ஆகியவை, யூதர்களிற்கும் பாலஸ்தீனர்களிற்கும் இடையில் உள்ள சீர்குலைந்த அரசியல் நிலைகளை பிரதிபலிக்கின்றன.

பாலஸ்தீனர்களின் பிரதேசங்களை சுற்றி, இஸ்ரேலியர்களின் கட்டப்பட்டுள்ள குண்டு துழைக்க முடியாத மைல் கணக்கான ஐம்பது மீற்றர் உயரத்திற்கு மேலானா மதில்கள், இஸ்ரேலியர்களின் அடக்குமுறையையும், பாலஸ்தீனியர் மீது தினிக்கப்பட்டுள்ள அடிமைத்தனத்தையும் பிரதிபலிக்கின்றனா. இவை பற்றி பல மணித்தியலாயங்கள் பேசவும், பல பக்கங்கள் எழுதவும் தகவல்கள் உள்ளன.

நாம் ரமாலாவிற்கு சென்ற சமயம், பாலஸ்தீனத்தின் விடுதலை வீரன் ஜசீர் அரபாத்தின் கல்லறைக்கு சென்று வணக்கம் செலுத்தினோம். இவ் கல்லறை, பாலஸ்தீனிய படைகளினால் பாதுகாப்பாக கௌரவிக்கப்படுகிறது.

பெத்தலகேமிற்கு நாம் சென்ற சமயம், அங்குள்ள பாலஸ்தீனியர் சிலர், ஈழத் தமிழர்கள் போல், தங்களை உலகம் மறந்து விட்டதாக கூறினார்கள். பாலஸ்தீனியாரை பொறுத்தவரையில் இது மிகைப்படுத்ப்பட்ட விடயம். உண்மை என்னவெனில், ஜெனிவாவில் .நா. மனித உரிமை சபை நடைபெறும் ஒவ்வொரு அமர்விலும், பாலஸ்தீனியர்களது விடயங்களை உரையாடுவதற்காக ஒரு முழு நாள் ஒதுகப்பட்டுள்ளது. அத்துட ஐக்கிய நாடுகள் சபைக்கு இரண்டாவது நிலையில், ஐம்பத்தி ஏழு அங்கத்துவ நாடுகளை கொண்டுள்ள, “இஸ்லாமிய கூட்டுறவு ஸ்தாபனம்என்ற அமைப்பு, பாலஸ்தீனியர்களது விடுதலை போராட்டத்தை ஆதரிக்கின்றது.

பாலஸ்தீனியர்களுடன் உரையாடும் வேளையில், ஓர் முக்கிய விடயத்தை கவனத்தில் கொள்ள முடிந்தது. மற்றைய இனத்தவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி ஆட்சி செய்யும் சில நாடுகள், தாமும் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சாட்டு போக்கு சொல்லி தப்புகின்றனராம்.

பாலஸ்தீனியர்களை பொறுத்தவரையில், மற்றைய இனத்தவர்களை அடக்கி ஆளும் எந்த நாட்டினதோ, அரசாங்கத்தினதோ, தனிபட்டவர்ககளதோ ஆதரவு தமக்கு தேவையில்லையென வெளிபடையாக கூறினர்கள். இவர்களது இவ் துணிகர கொள்கைக்கு நாம் அடி வணக்குகிறோம்.

பாலஸ்தீனியர்களது இக் கொள்கை, சிறிலங்காவில் பாலஸ்தீனிவு ஆதரவு சங்கம் நடத்தும், முன்னாள் ஜனதிபதி மகிந்த ராஜபக்சாவிற்கும், அவரது சாகாக்களிற்கும் நன்றாக பொருந்துமென நம்புகிறேன். சிறிலங்காவில் முழு இனத்துவேசத்தை கட்டியெழுப்பி மற்றைய இனத்தவர்களை அடக்கும் இவர்கள், எப்படியாக பாலஸ்தீன மக்களின் விடுதலை போராட்டத்தை ஆதரிக்கா முடியும்?

ஈழத்தமிழர் களும் பாலஸ்தீனியர்களும்!
 

மிகவும் கவலை தரும் செய்தி என்னவெனில், பாலஸ்தீனியரது நிலையை ஈழத்தமிழர்கள் நிட்சயம் எட்ட போவது இல்லை. இதற்கு பல காரணங்கள் இருந்த பொழுதிலும், அவற்றில் ஒன்றை மட்டும் இங்கு  குறிப்பிடுகிறேன்.

2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், ஜெனிவா ஐ.நா. மனித உரிமை சபை அமர்வில் ஈழத்தமிழர்களிற்கு நன்மை தரக்கூடிய விதத்தில், காய்கள் நகர்த்தபடவில்லை. அங்கு கலந்து கொள்வோரில் பெரும்பான்மையானோரது முக்கிய நோக்கமும் செயற்பாடும், தாங்கள் ஜெனிவா .நா. மனித உரிமை சபையில் பிரசன்னமாகியுள்ளதாக செய்திகளையும், படங்களையும் தங்களது இணைய தளங்களிலும் முக நூல்களிலும் பிரசுரிப்பதே.

மனித உரிமை சபையில் உள்ள ராஜதந்திரிகளை சந்திப்பது, .நா. முக்கிய புள்ளிகளை சந்திப்பது என்பதை, ஓரு சிலரே பிரயோசமான முறையில் செய்து வருகிறார்கள். இதில் ஆங்கில மொழி பெயர்ப்பு இல்லாது விடயங்களை நேரில் கூறும் ஆளுமை பலரிடம் இல்லை. மொழி பெயர்ப்புடன் கூறுவதை கூட, .நா. மனித உரிமை சபையையும், .நா. மனித உரிமை ஆளுநரையும் குறை சொல்வதனால், என்ன  பிரயோசனம்? இப்படியான செயற்பாட்டிற்கு பல மைல்கள் தொலைவிலிருந்து பெரும் தொகை பணத்தை செலவழித்து யாரும் ஜெனிவாவில் ஐ. நா. வர வேண்டிய அவசியமில்லை.

.நா.வில் நடைபெறும் வெளிநாட்டவர்களது கூட்டங்களிலேயே தமது கருத்துக்களை துணிந்து கூற முடியாதவர்கள், தமக்கென உள்ள தமிழ் இணைய தளங்களிலும், முக நூல்களிலிலும் தம்மை பற்றி பிரச்சாரம் செய்வது, பாதிக்கப்பட்ட மக்களிற்கும், தமிழ் இனத்திற்கும், சர்வதேசத்திடமிருந்து எதனை பெற்று தரும் என்பதை, இவர்களிற்காக வக்காளத்து வாங்குபவர்கள் முதலில் சிந்திக்க வேண்டும்.  இதற்கு பெயர் அரசியல் செயற்பாடா?

கடந்த 31வது அமர்வில் நடந்த ஓர் சம்பவத்தை ஊதாரணத்திற்கு  சொல்கிறேன். மார்ச் 8ம் திகதி செவ்வாய்கிழமை .நா.மண்டபத்தில் நடந்த ஓர் கூட்டத்தில், முன்னாள் .நா. மனித உரிமை ஆணையாளடர்  திருமதி  நவநீதம்பிள்ளை அவர்கள் வந்து உரையாற்றியிருந்தார். அக் கூட்டத்தில் நானும் பங்களித்திருந்தேன். இக் கூட்டம் முடிந்து செல்லும், வேளையில் திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் என்னிடம் கூறியதாவது, தென் ஆபிரிக்காவில் என்னை சந்தித்த சில இலங்கை தமிழர், தாம் .நா. மனித உரிமை சபை கூட்டங்களில் கலந்து கொள்வதாக கூறினார்கள், ஆனால் வழமையான உங்களை தவிர, இங்கு வேறு யாரையும் காண முடியவில்லை ன்றார்?.  இப்படியாகத்தான் .நா. மனித உரிமை சபையில் தற்பொழுது ஈழத்தழிழரது செயற்பாடுகள் எடுத்துச் செல்லப்படுகிறது.

ஈழத் தமிழர்களது .நா. மனித உரிமை செயற்பாடு என்பது 1983ம் ஆண்டு முதல் நடைபெறுபவை. இவற்றிற்கு சாவு மணி அடிப்பதற்காக, சிறிலங்கா அரசு உட்பட,  மாறுபட்ட அரசுகளின் கை கூலிகளிகளானால் உருவாக்கப்பட்டவர்கள், தற்போது அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களேன கூறப்படுபவர்களை பாவிக்க ஆரம்பித்துள்ளார்கள்.  இவ்விடங்களில், யாவரும் தமது சுகௌரவத்தை காப்பாற்றி கொள்வது தான் புத்திசாலித்தனமானது.

ஆகையால் பாலஸ்தீனர்கள் போன்ற நிலையை, நாம் ஈழத்தமிழர்கள் சர்வதேசத்தில் அடைய வேண்டுமானால், பகட்டு வேலைகளை தவிர்த்து, அதற்குரிய மொழி ஆளுமை, வாத திறமை, பேச்சு திறமை படைத்தவர்களுடன் தகமை உள்ளவர்கள் .நா.விற்கு வரவேண்டும்.

நிட்சயம் எமது இளைய சமுதாயம் முன் வந்து .நா. வின் வேலை திட்டங்களை உரிய முறையில் அறிந்து பயின்று கொள்ள வேண்டும். இல்லையேல் இவை யாவும் பகட்டு, கண்காட்சி வேலையாகவே .நா.வில் தற்பொழுது நகர்த்தப்படுகிறது. ஈழத் தமிழர்களது தற்போதைய செயற்பாடுகளையிட்டு சிறிலங்கா அரசு கைகொட்டி சிரிக்கும் என்பதில் ஐயமில்லை.
 

. வி. கிருபாகரன்
பாரிஸ், பிரான்ஸ்Post a Comment

Powered by Blogger.