Halloween party ideas 2015
.

சிறையிலிருந்து விடுதலையான தமிழ்நாடு விடுதலைப்படைத் தோழர் இளங்கோ அடிகளின் மகனின் கல்விக்கு உதவிய தோழர் கரூர் தமிழ் இராசேந்திரனுக்கு தாய்த்தமிழ் இணையம் தலைவணங்குகிறது...அவர் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம்...
தோழர் கரூர் தமிழ் இராசேந்திரன் அவர்களின் கட்செவி பகிர்வு....
கரூர் தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த இளங்கோ தனது திராவிடர் கழக தொடர்பு மூலம் தமிழ்ப் பற்றாளர் ஆகி, பென்னாடம் புலவர் கலியபெருமாள் உடன் தொடர்புகொண்டு தமிழ்நாடு விடுதலைப் படையில் இணைந்து,
தூர்தர்ஷன் மூலம் 
ஈழத் தமிழ் விடுதலைப்புலிகளின் பற்றி பொய்ப் பரப்புரை செய்துவந்த்தற்காகவும், தமிழ் நிகழ்ச்சிகளை குறைவாகவும், இந்தி நிகழ்ச்சிகளை அதிகமாகவும் ஒளி பரப்பு செய்ததற்காகவும், இந்திய ராணுவம் இலங்கையிலிருந்து வெளியேற கோரியும்,
கொடைக்கானல் வானொலி நிலையத்தை தகர்க்க வெடிக்குண்டு வைத்ததில் ,காயமடைந்து, தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு , பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று , தண்டணைக்காலம் முடிந்து வந்துள்ள இளங்கோ, இப்போது இளங்கோ அடிகள் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக உள்ளார்.
தனது மகன் பிரபாகரனை படிக்க வைக்க வசதி இல்லை என இன்று 18/04/16 கூறி வருந்தினார்.
அவரது மகனை எனது கிங்ஸ் பார்க் பள்ளியில் சேர்த்து கட்டண விலக்கில் படிக்க வைக்க அனுமதி அளித்தேன்..
என்னால் முடிந்த அளவு தமிழ் உணர்வு போராளிகளுக்கு உதவி செய்து மன நிறைவடைகிறேன்....  வழக்குரைஞர்  கரூர் தமிழ் இராசேந்திரன்

Post a Comment

Powered by Blogger.