Halloween party ideas 2015
.

ஜெயலிதா தாயுள்ளம் கொண்டவராம்; பிள்ளைகளுக்கு என்ன தேவை என்று அந்த
தாய்க்குத் தெரியுமாம்.இப்படியெல்லாம் பேசியிருக்கிறார் அவர்.
வாங்கின கூலியைமதுக்கடையில் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு அப்பன் வர வீட்டில் அடுப்பெரியா
மல் பிள்ளைகள் அழுகின்றனவே இதுதான் தாயுள்ளமா?
பிள்ளைகளின் அழுகுரலை
மதிக்காமல் இலக்கு வைத்து மதுவிற்கச் சொல்லப்படுகிறதே இதுதான் தாயுள்ளமா?
படித்தபடிப்புக்கு ஏற்றவேலை கிடைக்காமல் 85 லட்சம் இளைஞர்கள் தவிக்கிறார்களே
இதுதான் தாயுள்ளமா?
பியூன் வேலைமுதல் துணைவேந்தர் பதவிவரை லஞ்சம் எனும்விலை வைத்து விற்கப்படுகிறதே இதுதான் தாயுள்ளமா?
நொடித்துப்போன விவசாயிகடனைத் திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்களே,அதை வேடிக்கை பார்க்கிறதே அரசு இதுதான் தாயுள்ளமா?
கிரானைட் மலைகளை மொட்டையடித்த
தாலும் தாது மணலைக் கொள்ளையடித்ததாலும் பூமித்தாய் கண்ணீர் வடிக்கிறாளே
இதுதான் தாயுள்ளமா?
செம்பரப்பாக்கம் ஏரியை முறையாகக் கையாளாமல் சென்னை மக்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டார்களே இதுதான் தாயுள்ளமா?
ஐந்த மாவட்டங்கள் புயல் வெள்ளத்தால் தத்தளித்தபோது அவர்களை நேரில்சந்தித்து ஆறுதல் சொல்லவில்லையே இதுதான் தாயுள்ளமா?
ஆனால் அடுத்தவர்அனுப்பிய நிவாரணப்பொரு
ட்களில் அம்மையாரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதே இதுதான் தாயுள்ளமா?
விருத்தாசலத்தில் வெயிலில் கருகவிட்டு சிலர் மாண்டதையும் இயற்கைச்சாவு என வருணித்தாரே
இதுதான் தாயுள்ளமா?
பிள்ளைகள் இப்படிக்கதறும்போது கொடநாடு,சிறுதாவூர் மாளிகைகளில் தான் "தவவாழ்வு" வாழ்வதாகக் கூச்சம் இல்லாமல் பொய்யுரைக்கிறாரே
இதுதான் தாயுள்ளமா?
இல்லை இல்லை இது தாயுள்ளம் அல்ல;
இரக்கமற்ற பேயுள்ளம். ......
இதற்குப் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள் வாக்காளர்கள்.
நன்றி திரு..  Ramalingam Kathiresan

Post a Comment

Powered by Blogger.