Halloween party ideas 2015
.

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் நான் வெற்றி பெற்றால், அதிகாரக் குவிப்பு செய்ய மாட்டேன், அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பேன்.

[1] தொகுதியிலுள்ள ஓய்வு பெற்ற பல்துறை வல்லுனர்கள், கற்றறிந்தோர், தொழில் முனைவோர், வணிகர் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசகர் குழு ஒன்றை அமைத்து, அவர்களின் அறிவுரைகளைப் பெறுவேன்.

[2] தொகுதியைச் சார்ந்த வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர்களிடமிருந்து தொகுதி மேம்பாட்டுக்கானக் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டுப் பெறுவேன்.

[3] இராதாபுரம் மற்றும் சென்னை ச.ம.உ.. (எம்.எல்.ஏ.) அலுவலகங்களில் தொகுதியைச் சார்ந்த சட்டக்கல்லூரி, அறிவியல், கலைக் கல்லூரி மாணவ மாணவியருக்கு ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு காலம் வரை உள்ளகப் பயிற்சி (internship) வாய்ப்புக்கள் வழங்கி அடுத்தத் தலைமுறை தலைவர்களை உருவாக்குவேன்.

[4] தொகுதியில் கல்வித் தரத்தை உயர்த்த, வேலை வாய்ப்புக்களைப் பெருக்க, கல்வியாளர்கள், தொழில் வல்லுனர்கள் அடங்கியக் குழு ஒன்றை நிறுவுவேன்.

[5] ச.ம.உ. (எம்.எல்.ஏ.) தொகுதி வளர்ச்சி நிதியை மேலாண்மை செய்வதற்கு ஐந்து ஆண்களும், ஐந்து பெண்களும் கொண்ட குழு ஒன்றை அமைத்து செயல்பட்டு, ஊழல் நடக்காமல் தடுப்பேன்.

[6] தேர்தல் அறிக்கையில் நான் முன்மொழியும் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தும்பொருட்டு ஆய்வுகள் மேற்கொள்ள, முன்னேற்பாடுகள் செய்ய மக்கள் குழுக்களை நியமித்து, அவர்களோடு இணைந்து பணியாற்றுவேன்.

மேற்குறிப்பிட்ட எந்தக் குழுவிலும் எனது குடும்ப உறுப்பினர்களோ, நெருங்கிய உறவினர்களோ இடம்பெற மாட்டார்கள் என்றும் உறுதியளிக்கிறேன்.
சுப. உதயகுமாரன்
இராதாபுரம்,
ஏப்ரல் 9, 2016.

Post a Comment

Powered by Blogger.