Halloween party ideas 2015
.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார். ..

முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் நேற்று திருச்சி பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “தனித் தமிழீழம் அமைவதற்கும், அங்கு தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தான் தொடர்ந்து பாடுபடப் போவதாகக் கூறியிருப்பதை மனமாற வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

மேலும் அவர் பேசுகையில்... “தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்
குடியுரிமை வழங்குவதின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிகாண முடியும் என்பதுதான் தனது அரசின் நிலைப்பாடாகும் என்று கூறியிருப்பதையும்,  இலங்கையில் முற்றிலும் அமைதி நிலவி   தமிழர்களுக்குப் பாதுகாப்பு நிலவும் சூழ்நிலை உருவானால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை அங்கு திருப்பி அனுப்பவேண்டும் என்பதுதான் தனது அரசின் நிலைப்பாடு என்று அறிவித்திருப்பதையும் தமிழர்கள் அனைவரும் வரவேற்றுப் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.

அன்புள்ள

பழ.நெடுமாறன்

ஊடகங்கள் மேற்கண்ட அறிக்கையை வெளியிடும்படி வேண்டுகிறேன்.

-ஆவல்.கணேசன்-
செய்தித்தொடர்பு செயலாளர்
தமிழர் தேசிய முன்னணி
9444920486

Post a Comment

Powered by Blogger.