Halloween party ideas 2015
.

தாயகத்தில் அன்றைய காலத்தில் அயராது ஈழத்தமிழர்களின் உரிமைக்காக உழைத்த வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESOHR )இன்றும் புலம்பெயர் மண்ணில் தனது பணியை முன்னெடுத்து வருகின்றது.

பிரித்தானியாவில் நடைபெறும் "இலண்டன் தமிழர் சந்தையில்" வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESOHR) தகவல் மையத்தை அமைத்து அமைப்பின் எதிர்கால நலன் கருதி பல்வேறு தேடலில் ஈடுபட்டது.அத்தோடு இத் தகவல் அமையத்தில் NESOHR அமைப்பால் உருவாக்கம் பெற்ற பல்வேறு தமிழின படுகொலைகளை ஆவணப்படுத்தும் நூல்கலும் வைக்கப்பட்டது. இத் தகவல் மையத்தில் வடகிழக்கு மனித உரிமை செயலகத்தின்  பிரதி தலைவராக செயற்படும் திரு சிவபாலன் அவர்கள் கலந்துகொண்டு உரையாடல்களில் ஈடுபட்டார்.

தமிழர் சந்தையில் கலந்துகொண்ட பல  நூற்றுக்கணக்கான மக்கள் வடகிழக்கு மனித உரிமை செயலகத்தின் மனித நேய  பணிக்கு தமது பல்வேறான  ஆதரவை  தெரிவித்துள்ளார்கள்.

2009 கடைசி கட்ட போரில் இவ்வமைப்பில் பணியாற்றி வந்து ஊழியர்கள் பலர் கொல்லப்பட்டனர். பல உறுப்பினர்கள் காணாமல் போய் உள்ளனர். பலருடைய விவரம் இதுவரை தெரியாமல் இருந்து வருகிறது. அத்தோடு, 2009 கடைசி கட்ட போரின் போது, இலங்கை அரசு பன்னாட்டு நிறுவனங்களையும், மனித உரிமை அமைப்புகளையும் போர் பகுதியிலிருந்து வெளியேறி, அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வருமாறு உத்தரவு பிறப்பித்திருந்த போதும், வடகிழக்கு மனித உரிமை செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களும், ஊழியர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரமறுத்து, பணியாற்றி வந்தனர்.

வடகிழக்கு மனித உரிமை செயலகத்தின் தலைவராய் இருந்த அருள் தந்தை எம்.எக்ஸ். கருணாரத்தினத்தை சிங்கள இராணுவம் ஆழ ஊடுருவும் படையை ஏவி, 20 ஏப்ரல், 2008 அன்று இவர் பயணம் செய்த காரை குண்டு வைத்து தகர்த்தது.

வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESOHR) தமிழின அழிப்பை உறுதிப்படுத்தும் முகமாக பல்வேறு படுகொலைகளை ஆவணப்படுத்தியது மட்டும்  அல்லாமல் வேற்றின மொழிகளிலும் ஆக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

--


International Council of Eelam Tamils (ICET) was established in 2011 by a number of grass-roots Tamil organizations, which were democratically elected by the Eelam Tamils. It is the largest Tamil diaspora organization with members drawn from fourteen countries. The ICET is absolutely committed to a non-violent agenda and it seeks a lasting peace in Sri Lanka, based on Vaddukoddai Resolution. For more information, please contact spokesperson Steven Pushparajah K, +47 90641699.
 
Address:

Via Alberto Melloni 3
,
42025 Cavriago,
Reggio Emilia,
ITALY



Post a Comment

Powered by Blogger.