Halloween party ideas 2015
.

!! 🚛🚓🚎🚜🚒🚐🚔🚙🚌🚐🚒🚔
கணியூர் சுங்கச்சாவடியின் கட்டணகொள்ளையை கண்டித்தும்,  சமூக ஆர்வலர்கள் மீது புணையப்பட்ட பொய்வழக்கை கண்டித்தும் நாளை 03.04.2016 ஞாயிறு காலை பத்து மணியளவில் மாபெரும் கையெழுத்து இயக்கம்
துவங்குகிறது .

மக்கள் அறவழி போராட்டத்தை உதாசீனப்படுத்தி விட்டு , தொடர்ந்து கட்டணம் என்ற பெயரில் அநியாயக் கொள்ளையை நடத்தி வரும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் அநியாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும் .
      பல்வேறு விதங்களில் துயரப்பட்டு கொண்டு இருக்கும் , வாடகை வாகன உரிமையாளர்களை அடியோடு நசுக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் போக்கை அடியோடு , தடுத்து நிறுத்திட வேண்டும் .
            விசைத்தறியாளர்கள் , விவசாயிகள் உழைப்பை உறிஞ்சத்துடிக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் போக்கை தடுத்திட வேண்டும் .
     கட்டணக்கொள்ளையை தாக்கு பிடிக்க முடியாமல் , டேங்கர் லாரிகள் , விற்கு லாரிகள், பெட்ரோலிய வண்டிகள் என நெடுஞ்சாலைகளில் ஓட வேண்டிய கணரக வண்டிகள் கிராமப்புற சாலைகளில் இரவு பகலாக ஓடுகின்றன .
இதனால் , கிராமபுற சாலைகள் நாசமாகின்றன , விபத்துக்கள் அதிகரிக்கின்றன , கிராமபுற அமைதி கெடுகின்றன .
   இப்படி கணியூர் சுங்கச்சாவடியின் அத்துமீறலால் , பொது மக்கள் தினம் தினம் சந்திக்கும் துயரங்கள் அவலங்கள் ஏராளம் ஏராளம் .
     இதற்கெல்லாம் முற்று புள்ளி வைத்திட நம் போராட்டத்தை வேகப்படுத்த வேண்டியது அவசியம் .
   அதன் முதல் கட்டமாக நாளை (03.04.2016) காலை 10 மணிக்கு கருமத்தம்பட்டி நால்ரோட்டில் துவங்கும் கையெழுத்து இயக்கத்துவக்க  நிகழ்வுக்கு அனைவரும் திரண்டு வாரீர் !!
   ஒன்று படுவோம் , வென்றெடுப்போம் !!

இடம் : கருமத்தம்பட்டி நால்ரோடு !
நேரம் : 03.04.16 காலை பத்து மணி !
🚐🚒🚔🚌🚙🚜🚕🚛🚓🚎🚔🚒

Post a Comment

Powered by Blogger.