Halloween party ideas 2015
.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் நல்லாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஊர்திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில்  வருவாய்துறையினரின்  விசாரனை கலந்துரையாடலில் திரு சின்ன சாமி 'இனிய நாங்கள் உங்கள் சாதிகார்களின் சாவுச் செய்தியை ஊர்ஊராய் இனி அறிவிக்க மாட்டோமம'... உங்களின் சாவு அடக்க மற்றும் எரியுட்டல் பணிகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்'- என்று பேசினார். அடுத்த நாள் மாலையே அருகில்யுள்ள கிணற்றில் பிணமாய் கிடந்தார். காவல்துறை வழக்கு பதிவு செய்து .மாவட்ட அரசு மருத்துவர்களால் உடல் கூராய்வு செய்து தற்கொலை என அறிக்கையும் அளித்து விட்டனர். நல்லாம்பட்டி தலீத் இளைஞர்கள் அனைத்து தலீத்துகள்அமைப்பினருக்கும் இயங்களுக்கும், கட்சிகளுக்கும். அனைத்து பெரியார் இயக்களுக்கும் அழைப்பு கொடுத்து. மிகப் பெரியளவில் ஒருங்கிணைத்து.... மறுகூராய்வுக்கு வழக்கு மன்றம் வழியாக நடைபெற்றது. 14 நாட்கள் கழித்து மிகப் பெரிய போராட்டத்திற்கு இடையில் சின்ன சாமியின் உடல் மறுகூராய்வு அறிக்கை வராமலேயே அடக்கம் செய்ய மாவட்ட காவல் துறையினர் திட்டமிட்டு அடக்கம் நடக்க ஏற்பாடு செய்தனர். அனைத்து தலித் அமைப்புகளும் பெரியார் இயங்களும் ஒரணியில் நின்று  நீண்ட பேரனியாக கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.... உடல் மறுகூராய் அறிக்கை வழக்கு மன்றம் வழியாக கிடைத்து விட்டது.... கொலை என்று அறிக்கை கிடைத்து விட்டது. காவல் துறையும் அரசு மருத்துவர்களும்  கொலை செய்த ஆதிக்க சாதிகளும் இணைந்து சதி திட்டம் தீட்டி கொலையை மறைக்க முயன்றுயுள்ளனர் காவல்துறையே ஆதிக்க சாதிக்கு துணை போகியுள்ளது ... சட்ட ஒழங்கை காப்பாற்ற வேண்டியவர்களே... பணத்திற்கு அடிபணிந்து போனது தான் கேவலம்... இப்போ வழக்கை சட்டரீதியாக இனி சந்தித்து தானே ஆக வேண்டும். கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்து கூண்டில் நிறுத்தி தானே ஆக வேண்டும்.  அதே போல் கண்டன ஆர்பாட்டம் நடத்த மாவட்ட வழக்குமன்றத்தின் அனுமதி கிடைக்காமல் உயர்நீதிமன்றத்தில் முறையிடப் பட்டுயுள்ளது. வெகுவிரைவில் திட்டமிட்டப் படி கண்டன ஆர்பாட்டம் நடைபெறம் முறையாக கொலை குற்றவாளிகளை தண்டனை கிடைக்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும்.

Post a Comment

Powered by Blogger.