Halloween party ideas 2015
.

வேலூர் மாவட்டம் விளாப்பாக்கம் (3.4.16)அன்று இரவு நடந்த வாய் தகராறு காரணம் காட்டி இரண்டு சமூகத்தை 6 பேரை கைது செய்தார் ஆய்வாளர்.அதில் மூன்று பேர் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்த இளைஞர்கள் தனது சின்னம்மா வீட்டுக்கு வந்த விருந்தாளிகள்(வெளியூர்காரர்கள்) அவர்களுக்கும் இதற்க்கும் துளியும் சம்மந்தம் கிடையாது அவர்கள் மீது யாரும் புகார் தெறிவிக்கவில்லை எண்பது கூறிப்பிடதக்கது.

இரண்டு சமூகத்தை சார்ந்தவர்களும் எங்கள் ஊரில் எந்த சண்டையும் இனி வராது நாங்கள் ஓற்றுமையாகத்தான் இருக்கிறோம் நாங்கள் புகார் கொடுக்க மாட்டோம் என்றார்கள். ஆனால் ஆய்வாளர் ராஜன் உள்ளே இருந்த இரு தரப்பை சார்ந்த ஒருவரிடம் ஆய்வாளரே புகாரை எழுதி மிரட்டி கையேழுத்து வாங்கிவிட்டார்.

கிராம மக்கள் அய்யா நாங்கள் சமாதானமாகத்தான் இருக்கிறோம் நீங்கள் ஏன் கட்டாயபடுத்தி புகார் வாங்குகிறீர்கள் கேட்டதற்க்கு ஏய் நீங்கள் யாரும் இங்கே பேசக்கூடாது இங்கே நான் வைப்பதுதான் சட்டம் நான் யார் என்று உங்களுக்கு தெறியாது என்னை பற்றி விழுப்புரத்தில் கேட்டுப்பாருங்கள் எல்லேரையும் உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார்.

(4.4.16)இரவு 9:00 மணிக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் 5 பேரையும் உயர்சாதியில் 3 பேர் மீதும் FIR பதிவு செய்தார். ஆதிக்க சாதியை சார்ந்த வக்கீல் ஆய்வாளரிடம் பேசி (கையூட்டல்) பெற்றுக்ககொண்டு அவர்கள் 3 பேரில் இருவரை மட்டும் ரிமாண்டுக்கு அனுப்பிவிட்டு அரை மணி நேரம் கழித்து ஆதிக்கசாதி ஒருவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள்.

பணம் கொடுத்து இருந்தால் முன்பே சமாதானம் செய்து இருப்பார் போல் தெரிகிறது. லஞ்சம் வாங்கிய மற்றும் சாதாரன வாய் தகரார்ரை சாதி கலவரமாக மாற்றிய ஆய்வாளர் ராஜன் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதே தொலைபேசியில் மாவட்ட கண்காணிப்பாளருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Post a Comment

Powered by Blogger.