Halloween party ideas 2015
.

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காகக் குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.
அழுக்குப் போகவா.....? கட்டாயம் கிடையாது.....!
மாதத்தின் மளிகைப் பட்டியலில் சோப்புப் பொட்டலத்தை வாங்கி அடுக்கி வைத்துக் கொள்கிறோம்....
சோப்பு எனப்படும் வழலைக் கட்டி எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா...?
கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில்
திட்டுத் திட்டாக எண்ணெய் (ஆயில்) படிந்துவிடும்....
இந்தக் கடின எண்ணெயை நீக்குவதற்காக சோப்புப் பயன்படுத்தினார்கள்.
கப்பலில் மட்டும் அல்ல ;
எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.
சோப்புப் போடுவதற்கு
நாம் எந்தக் கப்பலில் வேலை பார்த்தோம்...?
எந்தச் சேறு, எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்...?
வணிகப் பெருமுதலைக் கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த சோப்பை,
எல்லாரும் பயன்படுத்தும் படி பல திட்டம் தீட்டி கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி
நடிகர்களை நடிக்க விட்டு
நம் தலையில் கட்டிவிட்டார்கள்...
இதன் மூலம் என்ன ஆனது..?
சோப்புப் போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்புக் கொழுப்புப் படலத்தை நீக்கி விட்டோம்...
இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது.
இதைத் திரும்பச்
சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது....
நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல..
தோலின் மேல் இருக்கும் ஒவ்வொரு வியர்வைத் துளைகளும் வாயே.
சோப்பைப் போடுவதன் மூலம் வியர்வைத் துளைகள் வழியே இரசாயன நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலைப் பாதிக்கிறது. ...
சோப்புப் போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் ஈர்க்கும் (கிரகிக்கும்)
பஞ்சபூத
பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது.
இன்னும் இதன் தீமைகள் பல உண்டு.
சொல்லி மாளாது.
நாம் சோப்புப் போடுவதற்கு
எந்தச் சேறு,  எண்ணெய் இயந்திரங்களுக்குள்ளும் புரண்டு வருவதில்லை...
சரி பின் எதற்குத் தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?
குளியல் = குளிர்வித்தல்
குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.
மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்குக் காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்....
இரவு
தூங்கி எழும்போது
நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.
காலை எழுந்ததும் இந்த வெப்பக்கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக்க் குளிர்ந்தநீரில் குளிக்கிறோம்.
வெந்நீரில் குளிக்கக் கூடாது.
எண்ணெய்க் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது.
இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும்,
பின்,
முழங்கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதி,
இறுதியாகத் தலை.
எதற்கு இப்படி...?
காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
நேரடியாகத் தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கிச் சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையைக் கண்முன்னே கொண்டு வாருங்கள்....
குளத்தில் ஒவ்வொரு  படியாக இறங்குவார்கள்...
காலில் இருந்து மேல் நோக்கி நனையும்...
வெப்பம்
கீழ் இருந்து
மேல் எழும்பி, இறுதியில் தலை முங்கும் போது கண்,
காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது.
தலை எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.
எனவே
உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் தலையைத் தாக்காமல்
காது வழியாக வெளியேறிவிடுகிறது...
குளித்துவிட்டுச் சிறிது நேரம்
ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
குளியலில் இத்தனை விடயங்கள் இருக்கும் போது...
குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேறு, இப்படிச்
சுடு தண்ணீரில் சோப்பும், சேம்பையும் போட்டுக் குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.
குளிக்க மிக நல்ல நேரம் -
காலைக் கதிரவன் எழும் முன்...
குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சைத் தண்ணீர்.
குளித்தல் = குளிர்வித்தல்
குளியல் அழுக்கை நீக்க அல்ல...
உடலைக் குளிர்விக்க.....
!
இயற்கை  கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.
நலம் நம் கையில்
நன்றி !

Post a Comment

Powered by Blogger.