Halloween party ideas 2015
.

சோதிடர்கள் சொல்வதே இன்றைய ஆட்சியாளர்களின் ராஜதந்திரம் /மந்திரம் ஆகி வருகிறது. ஜெயாவின் சாதகத்தில் ராகு சிம்மம் ராசியில் உள்ளதால் தேய்பிறையே உகந்ததாம் என்று-சோதிடர் பரணிதரன் -தினமலர் நாளேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
தேய்பிறையில் எந்த நல்ல செயலும் தொடங்கக்கூடாது என்று சொல்லி பாமர படித்த மக்களை ஏமாற்றி வருபவர்களும்
இந்த சோதிடப் பொய்யர்களே.
1996-2006 தேர்தல்களில் ஜெயா தோல்வி அடைந்த போது இவர்கள் கணிப்பு  என்னவாயிற்று? தவறாகக் கணித்ததற்காக சோதிடர்கள் வாங்கிய அடி உதை எல்லாம் அப்போது ஏடுகளில்  செய்தியாக வந்துள்ளன.
ம.ந.கூட்டணியிலும் சோதிடம் பார்க்கப்படுகிறது என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது. வை.கோ பகுத்தறிவு  கொள்கையில் தடுமாறுபவர். தனது மகன் -மகள்  ஆகியோருக்கு சாதிப்பார்த்து -நல்ல நாள் -நல்ல நேரம் பார்த்துத் திருமணம் நடத்தியவர்.
ஆனால் "நமது தோழர்கள்" இதைப் பற்றி ஏன் சுட்டவில்லை.எல்லாம் தேர்தல் படுத்தும் பாடுதான்?
அறிஞர் அண்ணா தலைமையில் 1967 ஆம் ஆண்டில் தி.மு.க தேர்தல் களம் கண்டபோது அனைவரும் ராகுகாலத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.பெரும் வெற்றியைப் பெற்றனர்.
கர்நாடகத்தில், முதல்வர் சித்தராமையா இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ராகுகாலத்தில் தான் தாக்கல் செய்தார்.
மக்களுக்குத் தொண்டு செய்பவர்களை நாளும் கோளும் -சோதிடர்களும் ஆட்டிபடைப்பதா? கேட்டிலும் -கேடு-வெட்கங்கெட்ட கேடு!!
நமது அரசமைப்புச்சட்டத்தில் அடிப்படை கடமைகளில்-51 எ-எச்'- இல் சுட்டியுள்ள "பகுத்தறிவு -அறிவியல் மனப்பான்மை"ஆகியவற்றைப் புதைக்குழிக்கு அனுப்புவது தான் தேர்தல் முறையா?
தேர்தல் முடிந்து பதவி ஏற்பு முடிந்தபிறகு அடிக்கும் கொட்டங்கள்-வாங்கிக் குவிக்கும் சொத்துகள் - மோசடிகள் எல்லாம் கோயில் சென்று ஆண்டவன் அருள் பெற்று தான் நடக்கிறதா?

Post a Comment

Powered by Blogger.