Halloween party ideas 2015
.

விளையாட்டு வீரர்களுக்கு ஒமியோபதி

     காலந்தோறும் மக்களின் வாழ்க்கை முறை மாறிக்கொண்டே உள்ளது. மாற்றங்கள், முன்னர்ப் படிப் படியாகவும், இப்போது மிக விரைவாகவும் உண்டாகிக் கொண்டுள்ளன.

     இவ்வாறு மிக விரைந்து ஓடும் வாழ்க்கை முறைக்கு ஏற்பவே, மக்களைப் பிணிக்கும் பழமை யான நோய்களும், புதிய நோய்களும் கூட மாறு பட்டவையாகவும், அவற்றிற்கு ஏற்ப மருத்துவப் பண்டுவம் பார்க்கவேண்டிய தேவையை உடைய வையாகவும் காணப் படுகின்றன.

     இவற்றோடு, மாறிவரும் தொழில் முறைகளும் அவற்றால் உண்டாகும் பாதிப்புகளும் என, இன்னும் புதிய சூழல்களும் உள்ளன.

     எத்தகைய மருத்துவமும் இத்தகைய புத்தம் புதிய தேவை களுக்கு ஈடுகொடுப்பதாக அமைய வேண்டியுள்ளது.

     ஓமியோபதி மருத்துவம் ஒப்புமைக் (Similia) கொள் கையில் உருவானது. மூவாயிர ஆண்டுக் காலப் பழமையின வாகிய நெடுநோய் மூலங்களைக் (Chronic Miasms) கண்டறிந்து, அவற்றையும் போக்குவதற்கான வழிமுறைகளைக் கொண்டது; நோய்ப் பகையை அழிப்பதற்கு வீரிய ஆக்கம் என்னும் கூர்மை யான கருவித் துணையை உடை யது; நோய்த் தடுப்பும் முற் காப்பும் என்னும் தேவைகளை யும் முழுமை யாகக் கொண்டது. மருந்து நிறுவல் என்னும் முறை யினால் புதிய மருந்துகளை இம்மருத்துவ முறையில் சேர்ப் பதற்கு இடம் உண்டே அன்றி, அதன் உண்மைகளும் வழிமுறை களும் என்றும் மாறா இயல்பை உடையவை. பாதிப்புகளுக்கு ஏற்பவும் உண்டாகும் புதுப்புது அறைகூவல்களைச் சந்திக்கவும், அத்தகைய புதுப்புது மருத்துவத் தேவைகளை நிறைவாகத் தருவதற்கும் ஓமியோபதி மருத்துவத்தால் முழுமையாக இயலும் என்பதை அறிதல் வேண்டும்.ஆனால் இப்புதியனவாய்க் கருதப்படும் நோய்ப் பாதிப்புகளுக்கு ஓமியோபதி மருத்துவப் பயனை ஏற்கும் மனநிலை மக்களிடையே காணப்படவில்லை.

     புதிய தேவைகளாக உள்ளவற்றுள், விளையாட்டுப் பாதிப்புக்கான மருத்துவம் (Sports Medicine), பறக்கும் நிலைக்கான மருத்துவம் (Aviation Medicine) என்னும் இரண்டு துறைகளுக்கும் - ஓமியோபதி மருத்துவம் எவ்வாறு சிறப்பாக பயன்படும் என்பதைச் சுருக்கமாகக் காணலாம்.

விளையாட்டுக்கான ஓமியோபதி மருத்துவம் (Sports Medicine)

     ஓடுகள வீராங் கனையாக உலகப் புகழ் பெற்றவர் பி.டி. உஷா. அவருக்கு ஏற்பட்ட குதிகால் உளைச்சலால் அவர் ஓட்டப் போட்டி களில் பங்கேற்க முடி யாத நிலை உண்டா னது என்றும், ஓமியோ பதி மருத்துவத்திற்குப் பின்னர், 1989 இல் ஆசிய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு அவரால் பொற்பதக்கங்களை வெல்ல முடிந்தது என்றும் அவர் ஒரு செய்தித் தாளுக்கு அளித்த செவ்வியில் கூறினார். அவருக்கு ஓமியோபதி மருத்துவம் அளித்த மருத்துவர் இரசுத்தோகி என்பாரும் இச்செய்தியை ஒரு மாநாட்டில் கூறியதுடன், அங்குப் பயன்பட்ட மருந்து இரசுடாக்சு (Rhus tox.) என்றும் கூறினார்.

     விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடத்தைப் பெறவேண்டும் என்ற ஆசையினால் விளையாட்டுப் வீரர்கள் சிலர் ஊக்க மருந்துகளை உட்கொள்கின்றனர். சாராய வகைகளையும் போதை மருந்துகளையும் உட்கொள்பவருக்கு உண்டாகும் கிளர்ச்சி உணர்வைப்போல், ஊக்கப் மருந்துகளும் சற்று நேரத்திற்கு மட்டும் உடலின் செயலாற்றலைப் புறத்தே இருந்து அளிப்ப வையாகப் பயன்பட்டாலும், பின்னர் அவற்றின் படிகங்கள் சிறுநீரில் காணப்படுவதால் அவ்வீரர் களைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

     ஊக்க மருந்துகளுக்கு மாறாக - வீரியம் செய்யப்பட்ட ஆர்னிகா மருந்தை ஓரிரு வேளை உட்கொள்வதால் விளையாட்டு வீரர் களுக்குப் பல நன்மைகள் வாய்க் கின்றன. அவை வருமாறு :

1.அம்மருந்து, விளையாட்டு வீரர்களுக்குப் புறத்தே இருந்து ஊக்கமும் ஆற்றலும் அளிப்பதாக அமையாமல், அகத்தே பொதிந்துள்ள அவர்களுடைய உண்மையான ஆற்றலை வெளிபபடுத்துகின்றது.

2.விளையாட்டுப் போட்டிகளின்போது உண்டாகும் சிறுசிறு காயங்கள், அவற்றால் மிகும் வலி, குருதிப் போக்கு முதலானவற்றிற்கும் அம்மருந்து முற்காப்பு அளிப்பதாகப் பயன்படுகின்றது.

3.ஓமியோபதிமுறை வீரிய ஆக்கத்தால், மருந்துப் பொருளின் அடையாளம் ஏதுமில்லாமலும், அதனால் அம்மருந்தின் அடையாளங்கள் சிறுநீரில் படியாமலும் உள்ள நன்மைகளும் ஏற்படுகின்றன.

4.காற்பந்து (Foot-ball), கோற்பந்து (Hockey), கூடைப்பந்து (Basket-Ball), நீளத்தாண்டல் (Long jump), உயரத்தாண்டல் (High jump), நீச்சல் முதலான குறுகிய கால விளையாட்டுகளின் போது உடல் நன்றாக வணங்கிச் செயல்படவும், அங்குத் தேவையான நெட்டு ரத்தைப் (Stamina) பெருக்கவும் இம்மருந்து உதவுகின்றது.

                இவ்வாறே விளையாட்டுக்கு முன்னும், அதற்குப் பின்னும் நிலைகளுக்கு ஏற்ற மருந்துகள் ‘காலத்தாற்செய்யும்’ உதவிகளைத் தருகின்றன.

    விளையாட்டிற்கு முன் ஏற்படும் தடுமாற்றத்திற்கு – செல்சீமியம்
    தயக்கத்திற்கு              - சைலீசியா
    மனக்கவற்சிக்கு (Annienty)    - அர்செண்டம் நைட்ரிகம்
    விளையாட்டில் ஏற்பட்ட தோல்வியினால்     காணப்படும் மனநிலைகளுக்கு - இக்னேசியா, நேட்ரம்மூர்
    வெற்றிக்களிப்பினால் உண்டாகும் கிளர்ச்சிக்கு - காஃபியாகுரூடா
    விளையாட்டின் போது செய்துவிட்ட தவறுகளுக்காக வருந்திக் குலையும்போது - இசுடாபிசாகிரியா (Staphysagria)

     விளையாட்டுப் பயிற்சியின்போதும், போட்டியின் போதும் உண்டாகக் கூடிய பல்வேறு வகையான காயங்களுக்கு ஏற்ற ஓமியோபதி மருந்துகளைக் கொண்ட முதல் உதவிப் பெட்டியும் உடன் இருக்கவேண்டும்.

எல்லார்க்கும்போலவே, விளையாட்டு வீரர்களுக்கும் அவரவர்களுடைய உடல்வாகு களுக்கு ஏற்ற ஓமியோபதி மருந்துகள், அவர்களை உச்சத்தில் உயர்த்துவதற்கும் பயன்படும்.

 பறக்கை நிலை மருத்துவம் (Aviation Medicine)

தரைவழி யாகவும் நீர்வழியா கவும் செல் கின்றபோது சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமை, தலைவலி, இயக்கப் பிணி நிலை (Motion Sickness), ஓங்க ரிப்பு, கக்கு தல் முதலான தொல்லைகள் - வான்வழிச் செல்வோர்க்குப் பொதுவாக ஏற்படுவதில்லை.

     பல மணிநேரம் பறந்து வெளிநாடுகளுக்குச் செல்வோர்க்கு உண்டாகும் பாதிப்புகளுக்கு ஏற்ற ஓமியோபதி மருந்துகள் வருமாறு :

    உறக்கக் கேடு    - கோக் குலசு இண்டிகசு
    உயர் இடப் பிணிநிலை (High altitude sickness) – கோகா (Coca)
    வானூர்தி முப்பதாயிரம், நாற்பதாயிரம்   அடி உயரத்தில் பறக்கும்போது அங்குள்ள அழுத்த நிலைகளால் வானூர்தி திடுமென நூறு, இருநூறு அடி கீழே இறங்குவதால் உண்டாகும் பாதிப்பு                      - போரக்சு (Borax)

     அடிக்கடி வானூர்தியில் செல்வோர்க்கு உண்டாகும் பிற பாதிப்புகளுக்கு அவரவர்களு டைய உடல்வாகு மருந்தே பயன்படும்.

     கழுத்து - முதுகெலும்புச் சிறப்பு மருத்துவர் (Neck and Spine Specialist), முடிப்பாதுகாப்புச் சிறப்பு மருத்துவர் (Trichologist) என்பனவாகிய புதுப்புது ஆங்கில மருத்துவத் துறைகளுக்கும், ஓமியோபதி யின் முழுமை மருத்துவத்தால் நலம் விளைக்க முடியும். ஆயின், செயற்கை விந்துப் புகுத்தம் (Artifical insemination), வாடகைத் தாய்மைக் கருத்தரிப்பு (Surrogate parenting), ஆய்வுக் குழாய்க் கருத்தரிப்பு முறை (Test-tube method) முதலான முழுமைச் செயற்கைமுறைப் பண்டுவங்களைஅவ் ஆங்கில மருத்துவர்களுக்கே விட்டுவிட்டு ஓமியோபதியர்கள் ஒதுங்கிக் கொண்டு இயற்கையான மகப்பேறுக்கு வழியில்லாத நிலையில் ஏதிலிக் குழந்தையை எடுத்து வளர்க்கும் மாபெரும் அறச்செயலை அறிவுறுத்தலாம்.  

Post a Comment

Powered by Blogger.