Halloween party ideas 2015
.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பழங்குடிப் பெண் மணமாகாதவள் என்றால் அவள் கட்டாயம் ஒரு நக்சலைட் தான் எனபது அரசாங்கத்தின் எழுதப்படாத விதி! காரணம் நக்சலைட்டுகள் மணம் புரிவதில்லை.

தான் ஒரு நக்சலைட் அல்ல என்பதை மெய்ப்பிப்பதற்கு ஒரு பழங்குடிப் பெண் தன் மார்பகத்திலிருந்து பாலை வெளிக் கொணர வேண்டும் எனும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறாள்!சில சமயங்களில் இராணுவத்தினரே பழங்குடிப் பெண்களின் இரவிக்கைகளைக் கிழித்து, பிசைந்து எடுக்கின்றனர்! சில சமயங்களில் வேறு வழியின்றி,உயிர் பிழைப்பதற்காக பெண்களே செய்கின்றனர்; பால் வெளி வருதல் இல்லையெனில் அவள் ஒரு நக்சலைட்!

வயது வேறுபாடின்றி,அனைத்து பழங்குடிப் பெண்களும் இச்சோதனைக்கு ஆளாக்கப்படுகின்றனர்! கொடுமை என்னவெனில், தாய்ப்பால் கொடுக்கும் பழங்குடிப் பெண்களும் இதற்கு விதி விலக்கல்ல! மணமானோர் மார்புகள் பால் கொண்டிருக்க வேண்டும்; பால் சுரப்பற்றோர் மணமாகாதோராகக் கருதப்பட்டு நக்சலைட்டுகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்!

தாலிகளை இரவலாக அணிந்து, தாங்கள் மணமானவர்கள் என்று சொல்வதால் இராணுவத்தினர் இச் சோதனையை மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. சுக்மா மாவட்டம்,பெட்ரா கிராமத்தில் கடந்த 12-01-2016 அன்று இராணுவத்தினர் இச் சோதனையை மேற்கொண்டதில் , ஆறு பழங்குடிப் பெண்கள் பாலியல் முறைகேட்டுக்கும், அடி உதைக்கும், கற்பழிப்புக்கும் இரையாக்கப்பட்டு ஒருவரின் கை உடைக்கப்பட்டது!

தலைநகரங்களில் கற்பழிப்புகள் நடந்தால் தாவிக்குதிக்கும் தேசிய நீரோட்ட ஊடகங்கள், ஆயிரமாயிரம் பழங்குடி நிர்பயாக்களைக் கண்டு கொள்வதில்லை! ஒன்று இந் நாட்டின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்! அல்லது அனைவருக்கும் சம நீதி வழங்கப்பட வேண்டும்!!

செய்தி மூலம் :  தமிழில் கலையரசன்

Naxalite Test – Adivasi women as the Subject of Experiment and Breast Milk as the Evidence

Post a Comment

Powered by Blogger.