Halloween party ideas 2015
.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் பிரிவின் தொடர்பாளர்  திரு திருச்சோதி அவர்கள் மொரிசியஸ் மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு விசேட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மௌரிசியஸ் நாட்டில் காலம் காலமாக  சித்திரைபுத்தாண்டை புதிய வருடமாக  கொண்டாடி வருகின்றனர். புறநானுறு இலக்கியத்தின் உருவாக்கத்தின்  அடிப்படையில் அவர்கள் சித்திரை வருடப்பிறப்பை எழுச்சியாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் அவர்களின் கணக்கீட்டின் அடிப்படையில் 5118 வருடத்தை வெண்முக ஆண்டாக மிக விமர்சையாக  அவர்கள் வரவேற்று கொண்டாடினார்கள்.காலம் காலமாக தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை ஆதரித்து வந்தவர்கள், தமிழர்  வீரத்துக்கு  எடுத்துகாட்டாக இருக்கும்  புலி சின்னத்தையே தமது கொடியாக   பட்டொளிவீச பேரணியில் தாங்கிசெல்வார்கள்  . அத்துடன் அவர்கள்  நடாத்தும் அனைத்து  நிகழ்வுகளிலும் 2013 மே 18 3 ல்  மௌரிசியஸ் நாட்டில் நிறுவப்பட்ட தமிழீழ நினைவு சின்னத்தின் முன்பாகவும் மௌரிசியஸ் நாட்டில் தமிழ் மக்கள் நினைவாக இருக்கும் சிலம்பு நினைவு சின்னத்தின் முன்னராகவும்  மலர் வணக்க நிகழ்வுகளை நடாத்தி - தமது முன்னோர் - தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடாத்துவது  அவர்கள் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.

அதே போல் இவ்  வருடத்தில் தமிழ் மக்களை நினைவேந்தல் செய்யும் முகமாக  தூபிக்கு  மலர் வணக்கம் செய்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் அனைத்துலக ஈழத் தமிழர் அவையின் வெளிவிவகார அரசியல் பிரிவின் தொடர்பாளர்   திரு திருச்சோதி அவர்களும்  கலந்துகொண்டார்.

தொடர்ச்சியாக அங்கு  நடைபெற்ற கலை நிகழ்ச்சியிலும்  மொரிசியஸ் நாட்டின் பிரதம மந்திரி - உப ஜனாதிபதியாகிய மதிப்புக்குரிய பரமசிவம் வையாபுரி அவர்கள் மற்றும்  அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் அனைத்துலக ஈழத் தமிழர் அவையின் ஆதரவு அமைப்பான  மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பின்   தலைவர் உரையாற்றும்  போது சிறிலங்காவில்  தமிழருக்கு எதிராக மிக அமைதியான  ஒரு யுத்தத்தை நடாத்தி  கட்டமைப்புசார்  இன அழிப்பு நடைபெறுவதை சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது. மௌரிசியஸ் அரசின் , அதன் பிரதம மந்திரி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் ஈழத் தமிழர் விவகாரத்தை எடுத்து செல்வதோடு சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்பதையும்  வலியுறுத்தினார்.

மொரிசியஸ் நாட்டை தொடர்ந்து நேற்றைய தினம் திரு திருச்சோதி அவர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு நேற்றைய தினம் டுர்பான் நகரில்  ஆபிரிக்க தேசிய கவுன்சிலின் முக்கிய உறுப்பினர்களுடனும் , நட்டால் மாநிலத்தின் உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி அவர்களுடனும்  தென் ஆபிரிக்காவில் தமிழ் மக்களின் ஆதரவு அமைப்பின்  ஒழுங்கமைப்பில் சந்திப்புக்கள்  நடைபெற்றது.



--


International Council of Eelam Tamils (ICET) was established in 2011 by a number of grass-roots Tamil organizations, which were democratically elected by the Eelam Tamils. It is the largest Tamil diaspora organization with members drawn from fourteen countries. The ICET is absolutely committed to a non-violent agenda and it seeks a lasting peace in Sri Lanka, based on Vaddukoddai Resolution. For more information, please contact spokesperson Steven Pushparajah K, +47 90641699.
Address:
Via Alberto Melloni 3
,
42025 Cavriago,
Reggio Emilia,
ITALY



Post a Comment

Powered by Blogger.