Halloween party ideas 2015
.



சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான சர்வதேச நிபுணர் குழுவின் செயற்பாடுகளை பலப்படுத்துவதே தமிழர்களின் முதற்பணியென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தினை மையப்படுத்தி சிறிலங்காவினை நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கவென சர்வதேச நிபுணர்களைக் கொண்ட Sri lanka - Monitoring Accountability Panel (MAP)எனும் குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்ககம் நியமித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியிருந்ததோடு, பல வாக்குறுதிகளை அனைத்துலக சமூகத்திடம் சிறிலங்கா வழங்கியிருந்தது.

இந்த வாக்குறுதிகளின் நிறைவேற்றுப்பாடுகளை கண்காணிக்கும் இந்நிபுணர் குழு, இத்தீர்மானம் வழங்கியுள்ள 18 மாத காலத்தில், சிறிலங்காவின் நடப்பாடுகளை கண்காணித்து, அனைத்துலக சமூகத்திடம் வெளிப்படுத்தும் பணியினை இக்குழு மேறகொண்டு வருகின்றது.

இந்நிலையில், அனைத்துலக மட்டத்தில் பிரசித்தி பெற்றுள்ள இந்நிபுணர் குழுவின் செயற்பாடுகளை தடையின்றி,செயற்படுத்துவதற்குரிய நிதியினை திரட்டும் பணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இதனொரு அங்கமாக, லண்டனில் மக்கள் நிதிசேர் நிகழ்வொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விலேயே சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான சர்வதேச நிபுணர் குழுவின் செயற்பாடுகளை பலப்படுத்துவதே தமிழர்களின் முன்னுள்ள பெரும்பணியாக உள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் தமிழக திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் காணொளி ஊடாக தனது இந்நிபுணர் குழுவின் செயற்பாட்டுக்கு தனது தோழமையினைத் தெரிவித்திருந்ததோடு, உலகத் தமிழ் மக்களின் ஆதரவினையும் கோரியிருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமரன் அவர்கள், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் சுதன்ராஜ் ஆகியோரும் காணொளி ஊடாக கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் நோக்கோடு நியமிக்கப்பட்ட அனைத்துலக நிபுணர்குழுவின் முக்கியத்துவம் அதன் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்களை பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களின் கருத்துக்களையும் ஆதரவினை பெற்றுக் கொள்ளும் நோக்கோடு இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.


நிபுணர் குழுபற்றி விபரங்களுக்கு :


நாதம் ஊடகசேவை

Post a Comment

Powered by Blogger.