Halloween party ideas 2015
.

நீதிக்கும் அரசியல் உரிமைக்குமான தனது செயல்முனைப்பினை வெளிப்படுத்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், கூட்டாய்வு கருத்துப் பகிர்வும் கனடா ரொரண்ரோவில் சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த ஏப்ரல் 2ம் 3ம் திகதிகளில் நான்காவது ஆண்டாக இடம்பெற்றிருந்த இக்கூடலில், இம்முறை ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தினை மையப்படுத்தி நிறுவனப்பட்டுள்ள சிறிலங்கா - 'பொறுப்புடமை கண்காணிப்புக் குழு' வினை முதன்மைப்படுத்தியதாக அமைந்திருந்தது.

Sri Lanka's Accountability: Justice or Show Trials? குறித்த தலைப்பில் முதன்நாள் இடம்பெற்றிருந்த அமர்வில், Ms. Barbara Jackman, Ms. Tasha Manoranjan, Ms. Heather Ryan, Mr. Ali Beydoun  ஆகிய வளப்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கூட்டாய்வு கருத்துப் பகிர்வாக அமைந்திருந்தது. Mr. Kubes Navaஅவர்கள் இதனை நெறிப்படுத்தியிருந்தார்.

இரண்டாம் நாள் நிகழ்வு பல்சுவை நிகழ்வரங்காக இடம்பெற்றிருந்தது. 

அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் நிகழ்வுகளின் ஏற்பாட்டுக் குழு சார்பில் வரவேற்புரையினை வழங்கியிருந்தார்.

ஈழவிடுத்தலைப் போராட்டம் தற்போது இராஜதந்திர வழிகளில் வடிவமாற்றம் பெற்றதையும், மென்வலுவை கட்டியெழுப்ப வேண்டிய தேவை பற்றியும் விளக்கியிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இன்றைய உலக ஒழுங்கை மதித்து நடக்கும் அதேவேளை எமக்கு சம்மதம் இல்லாதவற்றை அதற்கான நியாயங்களுடன் உறுதியாக முன்வைக்கவும் தயங்கவில்லை எனவும் இடித்துரைந்திருந்தார்.

இதற்கு உதாரணம்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்திருக்கும் 'பொறுப்புடமை கண்காணிப்புக் குழு'  (MAP)  என தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள், பிரதான அனுசரணையாளர்களின் அறிமுகம் என்பனவற்றோடு பிரதம பேச்சாளர் திரு. தாமு கனகசபை அவர்களின் உரையும் பின் எமது அழைப்பை ஏற்று வந்திருந்த பிரமுகர்களின் உரைகளும் இடம்பெற்றன. 

நவா சட்ட நிறுவனத்தின் அதிபர் திரு. குபேஸ் நவா அவர்கள் 'பொறுப்புடமை கண்காணிப்புக் குழு' வின் பின்னணி, இதன் முக்கியத்துவம், இதன் பெறுமதி என்பனவற்றை காட்சிப்படுத்தலோடு கூடிய விளக்கியிருந்தார்.

'பொறுப்புடமை கண்காணிப்புக் குழு' வின் செயற்பாடுகளுக்கு நிதியொரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் இதனை திரட்டும் நோக்கில் நவா சட்ட நிறுவனம் சார்பில் பங்களித்து ஒரு தொகுதி நிதியினை பங்களித்திருந்த திரு. குபேஸ் நவா அவர்கள் ,நிதி சேகரிப்பையும் தொடக்கிவைத்தார்.  இதே வகையில் Unique Gems   அதிபர் திரு. பரா அவர்கள் அன்பளிப்பு செய்திருந்த ஆபரணம் ஏலத்தில் விடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.



நாதம் ஊடகசேவை

Post a Comment

Powered by Blogger.