Halloween party ideas 2015
.

தஞ்சை மாவட்டம் வடசேரி கிராமத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான கிங்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஏப்ரல் 9 2010 அன்று நடந்தது .இதில் கலந்து கொள்ள சென்ற வேளான் ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களை அனுமதிக்க மறுத்து குண்டர்களை ஏவி வன்முறையை உருவாக்கி பின்பு காவல்துறையை ஏவி கலந்து கொள்ள வந்த பொது மக்களையும் ஐயா நம்மாழ்வார் அவர்களையும் விரட்டி அடித்தார்கள் .
அன்று நம்மாழ்வார் சொன்னது "அரிவாளோடு தோன்றிய சிலர் கண் இமைக்கும் நேரத்தில் விவசாயிகளின் கூட்டத்தில் நுழைந்து இரண்டு விவசாயிகளை சரமாரியாக வெட்டிப்போட்டுவிட்டு, அந்த ஆலைக்குள்ளேயே அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை வசமாக பயன்படுத்திக் கொண்ட காவல்துறையினர் அப்பகுதி விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
இதனால் அந்த கருத்துக்கேட்பு கூட்டத்தை புறக்கணிப்பதாக முடிவு செய்து விட்டு வடசேரியைவிட்டு வெளியேறிவிட்டேன்!“
நம்மாழ்வாரைப் போலவே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த மற்ற சூழலியல் ஆர்வலர்களும் ஊரை விட்டு வெளியேறிய பின்னர், எதிர்கருத்து கூறுவதற்கு ஆளே இல்லாத நிலையில், கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி, அப்பகுதி மக்கள் அந்த ஆலைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த டி . ஆர் பாலு தலைமையிலான குழு மதுவிலக்கை பற்றியும் ஐயா நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி பற்றியும் அறிவிப்பது கோவத்தையும் சிரிப்பையும் ஒருங்கே வர வைக்கிறது .
பட்டத்து இளவரசர் கொண்டு வந்து மீதேன் திட்டத்திற்கு எதிரான பரப்புரையில் தான் தன் உயிரையே தியாகம் செய்தார் . இனியும் நம்மாழ்வார் பெயரை உச்சரித்து இறந்து போன அந்த மகாத்மாவை திமுக இழிவு படுத்த வேண்டாம்"

📡சமூக ஊடகம்
மைய செ.மே.மாவட்டம்.

Post a Comment

Powered by Blogger.