Halloween party ideas 2015
.

'தோல்வி பயத்தால்' போலி விளம்பரம் மூலம் தமிழக மக்களை ஏமாற்றும் திமுக-வினருக்கு விடுதலை சிறுத்தைகளின் கண்டனம்.......................
"தியாக தலைவர்-திருமாவளவன்" அவர்களால் அறிவிக்கப்பட்டு கடந்த 15-வருடங்களா விடுதலை சிறுத்தைகளின் "மீஞ்சூர் ஒன்றிய செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வருபவர் திரு.க.சேகர்"

இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் வி சி க-வின் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் "அருணகிரி" என்றும் , அவர் திமுக-வில் இணைந்தார் என்றும் போலி விளம்பரம் செய்கிறது திமுக .

ஆனால் அருணகிரி என்பவர் வி சி கட்சியில் அடிப்படை உறுப்பினராக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் இணைந்தார். ஆனால் அவருக்கு வி சி கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கவில்லை. பின்பு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அருணகிரி வி சி கட்சியில் இருந்து விலகிவிட்டார். எனவே அருணகிரிக்கும் வி சி கட்சிக்கும் இதுநாள் வரையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

எனவே இப்படி போலி விளம்பரம் மூலம் அரசியல் ஆதாயம் தேடி , அரசியல் பிழைப்பு நடத்தும் திமுக-விற்கு "விடுதலை சிறுத்தைகளின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்......
இவன்.....
அ.மனோ @ மனவழகன்,B.com, BL

Post a Comment

Powered by Blogger.