Halloween party ideas 2015
.

நண்பர்களே,

நாளை (03/04/16 - ஞாயிறு) நிகழும் செம்மை ஊர் சந்தையில் ‘உணவு நலம்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறேன்.

இடம்: தக்கர் பாபா வித்யாலயா பள்ளி, வெங்கட நாராயணா சாலை, தி.நகர், சென்னை

நேரம்: பகல் 12 மணி.

மிக முக்கியமான குறிப்பு:

ஊர் சந்தை என்பது பொருள் வணிகத்திற்காக மட்டும் நடத்தப்படும் நிகழ்வல்ல. மரபு வாழ்வியலின் அங்கங்களான உடல் நலம், விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. ஆகவே, முழு நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பலர், மாலை நேரத்தில் மட்டும் வருகிறார்கள். அந்த நேரத்தில் பெரும்பாலான கடைகள் இருக்காது, நிகழ்வுகளும் முடிந்திருக்கும்.

நாளை நிகழும் ஊர் சந்தையில் மாலை 4 மணிக்கு, பறையிசை நடனமும், தெருக் கூத்து வடிவிலான நாடகமும் இடம்பெறுகின்றன.

இவைபோக, ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நாள் முழுதும் நிகழும். இயன்றவரை, முழுமையாகப் பங்கேற்க வாருங்கள்.
ஊர் சந்தை குறித்த பிற விவரங்களுக்கு இணைப்பில் உள்ள அறிவிப்புப் படத்தைக் காணுங்கள். - Rajeswar

Post a Comment

Powered by Blogger.