Halloween party ideas 2015
.

நேத்திக்கு  ஒரு தமிழ் பேய் படம் பாக்க போயிருந்தேன்.

ஷோ முடியும்போது இரவு சுமார் 9.45 மணி இருக்கும் . என்னை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொன்ன என் புள்ளைய காணோம் .
போன் பண்ணா " அப்பா இங்க ஒரு இடத்துல மாட்டிகிட்டேன் நீங்க ஒரு ஆட்டோவில வீட்டுக்கு போய்டுங்க " ன்னு  சொன்னான் .

ஆட்டோ கெடைக்கல . OLA வுக்கு போன் பண்ணா 35 நிமிஷம் ஆகும்னு  சொல்லிட்டான் .

மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பித்தேன் .

விளக்குகளே போடாமல் ஒரு பஸ் வந்தது - அதுவும் எங்க ஏரியா வுக்கு போற வண்டி .

வண்டி மிக மிக மெதுவாக நகர்ந்து வந்தது .
கை காட்டியும் அது நிற்கவில்லை . பேய் படம் பாத்த  effect என் மன்சுலேருந்து மறயல .

யோசிக்காமல் ஓடிப் போய் வண்டியில் ஏறிக்கொண்டேன் .

டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார் .

என்ஜின் சத்தம்  கேக்கலை .
conducter  மற்றும் பயணிகள் யாரும் இல்லை 

ஆனால் வண்டி மெதுவாக  நகர்ந்து கொண்டு இருந்தது .

மனசு படக் படக் என்று அடித்துக் கொண்டது .

நடக்கறது ஒரு வேலை நாம பாத்த படத்தோட பார்ட் 2வா இருக்கோன்னு பயம்.  
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம் -

விளக்குகள் எரிய ஆரம்பித்தன ......

தட தட வென  நடத்துனரும்
சுமார் 20 பயணிகளும்  வண்டிக்குள் ஏறினார்கள் .

என்னைப்  பார்த்து  " எருமை மாடு ,
வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே  இருந்து

உயிரை குடுத்து தள்ளிகிட்டிருக்கோம் ,

நீ ராஜா  மாதிரி ஏறி உக்காந்துகிட்டியே ?

அறிவு இருக்கா  உனக்கு"ன்னு 
செம டோஸ்  விட்டாங்க .

Post a Comment

Powered by Blogger.