Halloween party ideas 2015
.

அன்று நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்கள் சிங்கள வெறியரின் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட பொழுது சடலமாக கிடத்தப்பட்டு இருக்கிறார் தந்தை என உணராமல் வழமை போல் தனது எச்சில் பதித்து முத்தம் சிந்தி தந்தையை தொட்டுத் தடவிய காட்சி காண்பவர் உள்ளங்களை உருக்கி வார்த்தது.

அதை விட நெஞ்சை உருக்கிய விடயம் என்னவெனில் ...
2015 செப்டம்பர் மாதம் நான் ஜெனீவா சென்ற வேளையில் அங்கு உணர்வாளர் கஜன் அவர்கள் இலங்கையில் நடக்கும் இன அழிப்பு சாட்சிய காட்சிகளை கொண்ட ஆவணங்கள் தொகுத்து ஒரு கூடாரம் ஒன்றை ஜெனீவா முன்றலில் அமைத்திருந்தார். அங்கு வந்த சிந்து தனது படத்தை தொட்டுச் சுட்டிக் காட்டி "இது நான் என் அப்பாவோடு. அப்பாவை கொஞ்சிக் கொண்டு இருக்கின்றேன்" என மழலை மொழியில் இரசித்தபடி கூறிய பொழுது நெஞ்சம் துடிதுடித்து.ஊமையாய் கதறியது.

எங்கள் தமிழினத்தின் அன்பு தேவதை சிந்துக் குட்டிக்கு உலகத் தமிழினத்தின் சார்பில் அழகு தமிழெடுத்து இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை அன்பு முத்தங்களோடு தெரிவிக்கின்றேன்.                                                                                                                                                                                                                                                                                                                        

யார் சொன்னார்கள் தேவதைகள் விண்ணில் இருந்து தான்  வருகின்றன என்று?

இன்று  எங்கள் இனத்தின் வலியை தன் விழியில் சுமந்து வாழும் செல்வமான தேவதை சிந்து குட்டி மண்ணில் இறகு முளைக்காத தேவதையாக தனது 10 வது அகவை பிறப்பை எளிமையாக அன்னையோடு வீட்டில் கொண்டாடும் அதே வேளை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் எல்லோரும் எங்கள் குலச் செல்வம் இவளை வாழ்த்தி மகிழ்வோம்!

விதைகள் மண்ணில் வீழ்வது மீண்டும் எழுவதற்கே!

வலிகளில் இருந்து மீண்டு எழ கற்ற இனம் விழ விழ எழும் தமிழாய் வாழ்த்துவோம் எங்கள் தமிழ் சேயாம் சிந்துக் குட்டியை.

எங்கள் ஈழ மண்ணின் விடுதலை வரலாறு பூக்களையும் பாக்களையும் மட்டுமல்ல மொட்டு அவிழாத அரும்புகளின் கண்ணீரையும்                                                                                                                                                   கூட வரலாற்று கருவில் விம்மலுடன் காவியமாக புதைத்து வைக்கின்றன.

இன்று தமிழ் நெஞ்சங்கள் தோறும் தலை சிறந்த தேசிய ஊடகவியலாளராக போற்றப்படும்  நாட்டுப்பற்றாளர்/ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் உயிர் செல்வமும் தமிழர் எங்கள் குலச் செல்வமுமான சிந்து குட்டி தந்தையை எங்கள் தேசத்தின் விடுதலைக்காக அள்ளிக் கொடுத்துவிட்டு அந்நிய தேசத்தில் அன்னையோடும் நெஞ்சம் நிறைந்த வேதனைகளோடும் தனிமையில்  10 வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றாள்.

சின்னஞ்சிறு பட்டாம் பூச்சி போல் தந்தையின் மாரில் முகம் புதைத்து உறங்கிய "அப்பாவின் கண்ணம்மா இன்று அப்பாவின் ஏக்கங்களை தன் நெஞ்சில் சுமந்து வாழ்கின்றாள்.

அப்பா இல்லை என்ற குறை எண்ணி வருந்தாதே செல்வமே. உலகத் தமிழர்கள் நாங்கள் இருக்கின்றோம் உன் பெரியப்பா சித்தப்பா மாமா மாமி, பெரியம்மா சித்தி.. என்ன முறை வேண்டுமோ கூப்பிடு.. நாங்கள் இருக்கின்றோம் இந்நாளில் மட்டுமன்றி இனி வரும் காலமெல்லாம் நன்மைகளே உன் வாழ்வாக ஏற்றங்கள் பல கண்டு கல்வியில் சிறந்து கலைகளில் மேலோங்கி நாடும் வீடும் போற்றும் பொன்மகளாக நீடூழி தமிழ் போல் என்றென்றும் தளிர்த்து வாழ வாழ்த்துக்கள்!

உலகெங்கும்  உள்ள உணர்வுள்ள  தமிழ்  மக்கள் அனைவரும் சிந்து குட்டியை வாழ்த்தி மகிழ்ந்திடலாம் வாருங்கள்.

முள்ளிவாய்க்கால் கொடிய இன அழிப்பு யுத்தத்தில் கோர வெறித் தாண்டவம் ஆடிய சிங்கள ஏவல் படையின் தாக்குதலுக்கு பலியாகி மண்ணில் விதைக்கப்பட்டது உன்னதமான உணர்வாளரின்   உடல் மட்டுமல்ல அவரின்  மகளின் வளர்ச்சியோடு கட்டி எழுப்பிய அவரது  அழகான வாழ்வியல் கனவுகளையும் எங்கள் மண்ணின் விடுதலைக்காக புதைத்தவர்.

விடுதலைக்காக சொல்லொணா வலிகள் சுமந்த சிந்து குட்டியினை போல் தாய் தந்தை என பெற்றவர்கள் இன்றி பரிதவிக்கும் குழந்தைகள் எம் மண்ணில் எண்ணில் அடங்காதவை.

இறுதி வரை மண்ணில் நின்று ஊடக கடனாற்றி எங்கள் அன்னை மண்ணுக்கே விதையான ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி  சத்தியமூர்த்தி அவர்கள் தனது மகளான சிந்துவை உயிரில் சுமந்து நேசித்து கோடி கனவு பல கண்டவர். எதற்கும் விலை போகாமல் நிமிர்ந்தே உறுதியாக வாழ்ந்தவர்.

"எதிரில் உள்ள எதிரியோடு போராட மட்டுமே களத்தில் கையிலேந்திய கருவிகள் உதவும்.

ஆனால் எதிரி எங்கு இருந்தாலும் கண்ணுக்கு தெரியாமல் எந்த தொலைவில் இருந்தாலும் கருத்தியல் என்ற ஆயுதம் மூலம் எதிரியை தாக்கி தகர்க்கும் வல்லமை எழுத்துப் போராளிகளுக்கு மட்டுமே உண்டு." என்று அன்று என்னிடம் தொலைபேசியில் தாயகத்தில் இருந்து ஊக்கம் தந்து வலிமையோடு ஒலித்த அந்த குரல்... இன்று எம்மோடு இல்லை என நினைக்கையில் அந்த இழப்பின் வலி இப்பொழுதும் வலியை தருகின்றது.

அந்த வகையில் ஊடகவியலாளன் கூட வலிமையான போராளியே என வாழ்ந்து நிரூபித்துக் காட்டியவர் நாட்டுப்பற்றாளர் / ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்கள்.

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி
ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் எனபதை நெஞ்சில் நிறுத்தி வாழ்ந்த தலை சிறந்த ஊடகவியலாளன்.

அப்படிப்பட்ட ஊடகவியலாளனின் வாரிசுக்கு எங்கள் மொழியும் எழுத்துக்களும் என்றென்றும் வாழ்த்தி பாடும்! வாழ்க பல்லாண்டு சிந்து!

Post a Comment

Powered by Blogger.