Halloween party ideas 2015
.

தாயகம் தேசியம்  தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழ்மக்களின் அரசியற் பெருவிருப்பினை முரசறைந்த 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மான ஆவணப்பதிவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

வட்டுக்கோட்டடைத் தீர்மானம் நாற்பதாவது ஆண்டினை தொட்டுள்ள நிலையில், இதனை மையப்படுத்திய ஆவண ஏடொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கவருகின்றது.

வட்டுக்கோட்டடைத் தீர்மானத்துடன் நேரடியாகவும், தொடர்புடையதாகவும் உள்ள ஒளிப்படங்கள், பத்திரிகைச் செய்திப் பதிவுகள், கட்டுரைகள் என இந்த வரலாற்றோடு ஒட்டிய விடயங்கள் எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொட்டு இற்றை வரை ஈழவிடுதலைப் போராட்டத்தின் அரசியற் பரிமாணங்கள், இத்தீர்மானத்தின் நற்பதாவது ஆண்டில் இதனுடைய அடுத்த அரசியற் பரிமாணம் என சமகால கட்டுரைகளும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த வரலாற்று ஆவணத்தின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு வட்டுக்கோட்டைத் தீர்மான ஆவணப்பதிவுகளை குறித்த இந்த  media@tgte.org மின்னஞ்சலுக்கு எதிர்வரும் மே 8ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

நாதம் ஊடகசேவை

Post a Comment

Powered by Blogger.