Halloween party ideas 2015
.

பாண்டே : வணக்கம் நண்பர்களே .. இன்று நாம் சந்திக்க இருக்கும் விருந்தினர் தேமுதிக தலைவரும்..

விஜயகாந்த் (இடைமறித்து): அதத்தான் பேட்டி போடுறதுக்கு முன்னாடி நாலு நாளா வெளம்பரத்துலயும் நியூஸுலயும் சொல்ல போறீங்களே.. விசியத்துக்கு வாங்க வேலை இருக்கு நெறய..

பாண்டே : இல்ல.. இது பார்மாலிட்டி அறிமுகம் ஸார்..

விஜயகாந்த் : இப்ப இப்டியே சொல்லி விஜயாந்த்த நாங்கதான் அறிமுகப் படுத்தினோம்னு சொல்றத்துக்கா.. ஒங்க திட்டமும் தெரியும்.. உங்க ஊடக பொய்களும் தெரியும்.. இதத் தெரிஞ்சே வந்திருக்கேன்னா புரிஞ்சிக்கங்க என்ன பத்தீ..

பாண்டே : சரி ஸார்.. நாம நிகழ்ச்சிக்கு போவோம்..

விஜயகாந்த் : நிகள்ச்ச்ச்சிக்கு தானே என்னகூப்டீங்க.. இப்ப போவம்னு சொல்றீங்க?  வேற எங்க போவனும் இன்னும்..?

பாண்டே : (சிரிப்புடன்) பேட்டியை துவங்கலாம்னு சொல்ல வந்தேன்..

விஜயகாந்த் : பேட்டி தானே போய்கிட்டிருக்கு.. என்ன நிருபரோ நீங்க.. கேள்விகூட சரியா கேக்கத்தெர்ல.. அதுக்காவதான் நா டிவி காரன்கிட்டயே பேசுவதில்ல..

பாண்டே : தேமுதிக திமுக கூட்டணி உருவாக இருப்பதாக வரும் செய்திகள் குறித்து உங்க கருத்து என்ன?

விஜயகாந்த் : இப்டி ஏதாவது நீங்களா நெனச்சி நீங்களா கெளப்பி விடுறீங்க..

பாண்டே : தேமுதிக திமுக கூட்டணி உருவானதாகவும் இதில் 59 தொகுதிகளுக்கு தேமுதிக ஒப்பு கொண்டதாகவும் வரும் தகவல்கள் பற்றி?

விஜயகாந்த் :(ஆவேசத்துடன் எழுந்து நின்று கையை நீட்டி) இந்த கேள்வியை ஜேய்லலிதாட்ட கேப்பியாய்யா? நீ எந்த டிவி காரன்யா? ஜெயா டிவியா கலைஞர் டிவியா?

பாண்டே : தந்தி டிவிஸார்.. அமைதி .. உட்காருங்க...

விஜயகாந்த் : (முகத்தை துடைத்தபடி அமர்கிறார்) தந்தி டிவி ன்னு சொல்லி கூட்டி வந்து ஜெயா டிவிகாரன் மாதிரி கேக்குற..

பாண்டே : ஸார் ..தந்தி தொலைக்காட்சியின்  கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ..

விஜயகாந்த் : கேள்விக்கெல்லாம் பதில் சொல்லீட்டுருக்க முடியாது.. பதில் சொல்றா மாதிரி கேளுங்க ..

பாண்டே: பாஜக வுடன் கூட்டணி அமைப்பீர்களா?

விஜயகாந்த் : மே 16 தான் எலக்ஸன்.. இன்னும் டைம் நெறைய்யா இருக்கு.. அதுக்குள்ள அவங்ககூட கூட்டணி இவங்க கூட கூட்டணின்னு கோத்து விட்டு வேடிக்கை பாக்காதீங்க..

பாண்டே: கூட்டணி அமைந்தால்தானே பிரச்சாரம் பண்ண ஏதுவாக இருக்கும்?

விஜயகாந்த் : ஏன் நீங்க வந்து பிரச்சாரம் பண்ண போறீங்களா? அதை பத்தி கவல பட வேண்டியது நானும் எங்கூட கூட்டூ சேரும் கச்சியும்தான்..

பாண்டே : சரி உங்கள் அணி வெற்றி பெற்றால் யார் முதல்வர்?

விஜயகாந்த் :(எரிச்சலுடன்) அது எங்க கூட கூட்டணி வைக்கும் கச்சிங்களை பொறுத்து தெரியும்..

பாண்டே: திமுக வாக இருந்தால் யார் முதல்வர்?

விஜயகாந்த் : திமுக கச்சிகிட்டபோய் கேப்பீங்களா இத? ஒங்க கச்சி ஜெய்ச்சா கலைஞரா ஸ்டாலினான்னு கேப்பீங்களா? எல்லாம் விஜகாந்த்த மாட்டி விட்டு வேடிக்கை பாக்குறதுலேயே இருக்கீங்க .. அதுக்கெல்லாம் பயப்பட மாட்டான் இந்த விஜகாந்த்..

பாண்டே : அடுத்து கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதா?

விஜயகாந்த் : (ஆவேசமாக) என்னடா நீ அதயே மாத்தி மாத்தி கேட்டு கடுப்பேத்துற.. போய் ஜேலலிதாகிட்ட கேளுடா... கலைஞர் கிட்ட கேளுடா..
ஜேலலிதா பத்தி ஒண்ணும் கேக்காம.. எங்கச்சி கூட்டணி பத்தி எங்கிட்டீயே கேக்குறீயா? த்தூதூ.,....

(பாண்டேவை நோக்கி முஷ்டியை மடக்கி விஜயகாந்த் முன்னேற.. "லைட்ஸ் ஆஃப் ..கேமரா ஆஃப்" என கதறியபடி ஓடுகிறார் பாண்டே)

Er.B.கேசவன் M.E
தகவல் தொழில்நுட்பபிரிவு
திருச்சி  புறநகர் மாவட்டம்

Post a Comment

Powered by Blogger.