Halloween party ideas 2015
.



இன்று மாலை 5 மணிக்கு தி நகர் பேருந்து நிலையத்தில் சிறு அளவில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளை காவல்துறையும், பேருந்து நிலைய மேலாளரும் தொழில் செய்யவிடாமல் சட்ட விரோதமாக தடுத்து அவர்கள் பொருளை பரிமுதல் செய்வது மிரட்டி லஞ்சம் பெறுவது பொய் வழக்குகளை பதிவு செய்வேன் என்று மிரட்டுவது தகாத வார்த்தைகளை சொல்லி திட்டுவது போன்ற தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததற்கு எதிராக சாலையோர ஒருமைப்பாட்டு சங்கத்தின்(இணைப்பு: ஜனநாயக தொழிற்சங்க மையம்) சார்பில் அவ்வியாபாரிகள் ஒரு உரிமை மீட்க பேருந்தை சிறைபிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போராட்டத்தின் கோரிக்கைகளாக

 

1)THE STREET VENDORS (PROTECTION OF LIVELIHOOD AND REGULATION OF STREET VENDING) ACT 2014 நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

2) 03.09.2015 அன்று சென்னை உயர்நீதிமன்றம் மாம்பலம் R1 காவல் நிலைய ஆய்வாளருக்கும், உதவி ஆணையாளர் அவர்களுக்கும்  போட்ட சாலையோர வியாபாரிகள் ஒழுங்கு படுத்தும் சட்டம் உத்தரவை நடைமுறைபடுத்த கோரியும்

 

3)பேருந்து நிலைய மேலாளர் தொடர்ச்சியாக இச்சிறுவியாபாரிகளின் வியாபாரம் செய்யவிடாமல் அவர்கள் பொருளை பறிமுதல் என்ற பெயரில் திருடி கொள்ளும் மேலாளர் ஜேகர்ராஜா கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்

போராட்டம் நடைபெற்றது.

 

இச்செய்தியை தங்கள் ஊடகத்தில் பதிவு செய்து இவ்வியாபாரிகளின் நலம் காக்க துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

 

இப்படிக்கு

கண்ணன்

கெளரவ தலைவர்

சாலையோர வியாபாரிகள்

 ஒருமைப்பாட்டு சங்கம்

தி நகர்

தொடர்பு : 9042274271

 

 இத்துடன் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது...


Post a Comment

Powered by Blogger.