Halloween party ideas 2015
.

சீமானை இன வெறியன் என்று சொல்ல பேராசிரியர் அருணன் யார் ? ஈழத்தை பொருத்தவரை இந்த இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை பற்றிய இவர்களின் நிலைப்பாடு என்ன? ஈழத்திற்க்கு எதிராக வெளிப்படையாகவே செயல்படும் இவர்கள் தமிழ்நாட்டில் ஒரு தமிழனை பார்த்து இனவெறியன் என்று சொல்வது கண்டிக்கத்தக்கதே ! 

ஈழத்தை மட்டுமே மைய்யமாக வைத்து அரசியல் செய்த வைகோ போன்ற ஒரு தலைவர் இன்று கேவலம் இந்த அரசியல் செல்லா காசுகளுக்காக ஈழத்தை விட்டு கொடுத்து அவர்களுடன் கூட்டணி சமரசம் செய்ததற்காக வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும்.
நேற்று வரை தி.மு.க வில் இருந்து சுகங்களை அனுபவித்து விட்டு, ராஜபக்சவுடன் கை குலுக்கி பரிசு பெற்றுவிட்டு, இன்று திடீர் என்று கலைஞருக்கு எதிராக கேவலம் அரசியலுக்காக தனது கொள்கைகளை விட்டு கொடுத்த திருமாவளவன் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ...
விஜயகாந்த் போன்ற ஒரு கொள்கையற்ற தலைவனின் வாசலில் கூட்டணிக்காக பிச்சை எடுக்கும் இந்த மக்கள் நல கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் தந்தை பெரியார், மார்க்ஸ் போன்ற அரசியல் ஆசான்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு மோடியை அழைத்து வந்து மோடி வித்தை காட்டியது திராவிட கட்சிகள் அல்ல, தமிழ் தேசிய கட்சிகள் அல்ல. அந்த வித்தை காட்டியது அண்ணன் வைகோ தான். அப்போது மோடியை விமர்சித்த அருணன் போன்றார், இன்று வைகோவுடன் கூட்டு போட காரணம் என்ன?
கேவலம் பதவி ஆசை தானே?
இப்படி ஊரை ஏமாற்றும் மக்கள் நல கூட்டணியும் அருணன் போன்றோரும் தான் சீமானிடமும் , தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்...
இங்கே எவனிடமும் தமிழன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழர்களிடம் தான் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்..

--  Navaratnam Kiri (அருள்மொழி செழியன் )

Post a Comment

Powered by Blogger.