Halloween party ideas 2015
.

வயிற்றுப் புண்ணை உருவாக்கும் பாக்டீரியாவை அழிக்க மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது போல, பல் சொத்தையை தடுக்கவும் மாத்திரை வரப்போகிறது. வாயில் அமிலத் தன்மை அதிகமாகும்போது, குறிப்பிட்ட வகை பாக்டீரியா குடியேறி, பல்லை அரிக்க ஆரம்பிக்கிறது.

சிலருக்கு பல் சொத்தை வராது. அப்படி கொடுத்து வைத்தவர்களின் வாயில் அமிலம், யூரியாவாக சிதைக்கப்படுவதால், அவர்களது பல் சொத்தையாகாமல் தப்பிக்கிறது.

அமெரிக்காவிலுள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராப்ர்ட் பர்ன் மற்றும் டாக்டர் மார்செல் நசிமென்டோ ஆகியோர், இந்த நல்ல வேலையை செய்யும், ‘ஸ்ட்ரெப்டோகஸ்’ என்ற பாக்டீரியாவின் ஒரு வகையை இனம் கண்டுள்ளனர்.

இந்த நல்ல பாக்டீரியா, ‘சொத்தை உருவாக வாய்ப்புள்ளவர்களுக்கு மாத்திரை வடிவில் அறிமுகப்படுத்தினால் பல் சொத்தையாகும் வாய்ப்பை தடுக்கலாம்’ என்று இரு மருத்துவர்களும் கருதுகின்றனர்.

Post a Comment

Powered by Blogger.