Halloween party ideas 2015
.

தி.மு.க.வை பழிவாங்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கே வைகோவிற்கு, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை என்ற அணியுடன் விஜயகாந்த் இணைந்ததன் மூலம், ஜெயலலிதாவை வீழ்த்தும் வியூகத்தில் விஜயகாந்த் தோற்றுவிட்டார்.

முதல்வர் ஆசை காட்டிய கூட்டணியில் விஜயகாந்த் சபலப்பட்டு சாய்ந்ததன் மூலம் அவரது அரசியல் முடிவுக்கு வந்துள்ளது.

விஜயகாந்தின் முடிவு தற்கொலைக்குச் சமம்!

விஜயகாந்த் கட்சியினர் பெரும்பாலோர் இதை ஏற்கவில்லை. எனவே, கட்சி உடையும் அல்லது அவர்கள் தி.மு.க. விற்கு வாக்களிப்பர்.

விஜயகாந்த் முதல்வர் பதவிக்குச் சிறிதும் தகுதியில்லாதவர். அவர் பிரேமலதாவின் கைப்பாவை! எனவே, அந்தத் தலைமையை மக்கள் ஏற்க மாட்டார்கள்!

2016 தேர்தலின் ஒற்றை நோக்கு இதுதான்: .

செயலிழந்த அராஜக அ.தி.மு.க அரசு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒட்டு மொத்த எண்ணம். அதற்கு ஒரே வழி திமுகவிற்கு வாக்களிப்பதே! அதிமுக மீண்டும் வந்தால் அராஜகமும், அத்துமீறலும், அபகரிப்பும் எல்லை மீறும்.

அதற்கு திமுக வருவது எவ்வளவோ மேல்.

திருந்தி நடக்க வாய்ப்புண்டு என்பது தானே மக்கள் எண்ணமாக இருக்கும். தமிழக மக்கள் வாக்குகளை வீணடிக்க மாட்டார்கள்!

இன்றைய தமிழக அரசியல் சூழலில் அதிமுகவை வீழ்த்த திமுக அணியைத் தவிர எந்த அணிக்கும் வலிமையில்லை. இதை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.

வைகோ அணிக்கோ, அன்புமணிக்கோ, சீமானுக்கோ அளிக்கபடும் வாக்கு ஜெயலலிதாவிற்கு சாதகமான வாக்கு என்பது மக்களுக்கு நன்கு தெரியும். மதவாத பாஜக வை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

எனவே, தமிழக மக்களுக்கு திமுக மீது சில வெறுப்புகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த திமுக அணியையே மக்கள் இத்தேர்தலில் ஆதரிப்பர்.

திமுகவிற்கு மக்கள் அளிக்கும் கடைசி வாய்ப்பாக அது அமையும். அதைப் புரிந்து திமுக தூய்மையான ஆட்சி நடத்தினால், திமுக நிலைக்கும். இல்லையேல் இத்தேர்தலோடு முடியும். அதற்கு மேலும் தவறு செய்தால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதை ஆழமாக திமுக மனதில் கொள்ள வேண்டும்.

எனவே, திமுக பழைய தவறுகளை முற்றாகக் களைந்து நேர்மையான வெளிப்படையான, தமிழர் நலன் சார்ந்த ஆட்சியை செய்ய தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கொடுக்கும் வாக்குறுதியை எப்பாடுபட்டாகிலும் நிறைவேற்றி களங்கத்தைப் போக்க வேண்டும்.

இத்தேர்தலில் மக்கள், குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் ஒன்றே தீர்வு.

ஆம். திமுகவும் கலைஞரும் செய்த தவறுகளைவிட சாதனைகள், பணிகள், வளர்ச்சித் திட்டங்கள், சமத்துவ செயல்திட்டங்கள் ஏராளம். இவற்றை எவரும் மறுக்க முடியாது. இலங்கைத் தமிழருக்காக ஆட்சியை இழந்தவர்

எனவே, அவற்றை எண்ணி வாக்களிப்பதே வள்ளுவர் காட்டும் வழி!

பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து அதிமுக ஆட்சியை ஆதரிக்கும் போது, பார்ப்பனர்களல்லாதார் திமுகவை ஆதரிப்பதே தமிழர் நலனுக்கும், தமிழருக்கும், தமிழர் வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்கமுடியும்!

தமிழர்கள் பார்ப்பன நரிகளுக்குப் பாடம் கற்பிக்க சரியான வாய்ப்பு இத்தேர்தல். தமிழர்கள் விழிப்போடிருந்து வாக்களிக்க வேண்டும்!
- மஞ்சை வசந்தன்

Post a Comment

Powered by Blogger.