Halloween party ideas 2015
.

காஞ்சிபுரம் ஒன்றியம் - முசரவாக்கம் கிராமத்தை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் தோழர் சரவணன் தனியார் பால் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று 11-03-2016 இரவு 7 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் தாமல் கிராமத்தின் ஊர்த்தெருவைச் சார்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சரவணனை வழிமறித்து எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டுள்ளனர். அதற்கு சரவணன் முசரவாக்கம் காலணி என்று சொல்லியிருக்கின்றார். காலனிப் பையன் ஊர்த்தெரு வழியாக ஏன் வருகின்றாய் என்றும் சாதிய நோக்குடன் தகாத வார்த்தைகள் பேசி கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர்.

புரட்சியாளர் அம்பேத்கர் படமும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் படமும் பொறித்திருந்த தோழர் சரவணனின் இரு சக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்தியுள்ளது அந்த வன்முறை கும்பல்.

சாதிய நோக்குடன் தோழர் சரவணனை தாக்கியதோடு அவரின் இரு சக்கர வாகனத்தை தீயிட்டு எரித்த குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ வழக்குப்பதிவு செய்து கைதுசெய்ய வேண்டுமென்று காஞ்சிபுரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.

தோழர் சரவணன் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

களத்தில் கட்சியின் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஓரிக்கை டேவிட், மாவட்ட துணை செயலாளர் திருமாதாசன், தொகுதி துணை செயலாளர் புத்தேரி ஸ்டேன்லி.

செய்தி: Mathi Aadhavan
மாவட்ட செய்தித் தொடர்பாளர்
காஞ்சிபுரம் மேற்கு விசிக.

Post a Comment

Powered by Blogger.