Halloween party ideas 2015
.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர்  தலித் இளைஞர் உடுமலைப்பேட்டை சங்கர் - கவுசல்யா ஆகியோரை கடந்த 13-03-2016 அன்று சாதிவெறி கும்பல் பட்டப்பகலில் வெட்டி சங்கரை படுகொலை செய்தனர்.
உயிருக்குப் போராடும் நிலையில் கோவை அரசுப் பொது மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவரும் கவுசல்யாவை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளர்கள் இன்று 23-03-2016 நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
சிகிச்சையிலிருக்கும் கவுசல்யா, நான் வேலைக்குச் சென்று என் கணவர் சங்கரின் குடும்பத்தை பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
நீங்கள் மீண்டும் கல்வியைத் தொடர வேண்டும் என்றும் எதிர்கால படிப்புச் செலவுகளை விடுதலைச் சிறுத்தைகள் பொறுப்பேற்கும் என்றும் உறுதியளித்து கவுசல்யாவின் மருத்துவச் செலவிற்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
விரைவில் உடல்நலம்பெற்று சங்கரின் இல்லத்திலேயே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தலைவரின் சார்பில் ஆறுதல் கூறினர்.
மேலும் கவுசல்யாவிற்கும் தோழர் சங்கரின் குடும்பத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் உறுதியளித்தனர்.
களத்தில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அய்யா தகடூர் தமிழ்ச்செல்வன், துணைப் பொதுச்செயலாளர்கள் அண்ணன் வன்னிஅரசு, அண்ணன் கனியமுதன் ஆகியோருடன் கட்சித் தோழர்கள் வள்ளியூர் வீரக்குமார், வேதாமதன் உள்ளிட்டோர்.
-----
படங்களும் செய்தியும்:
தோழர் Joshua Isaac Azad.

Post a Comment

Powered by Blogger.