Halloween party ideas 2015
.

இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் தபெதிக'வின் தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது,,,

கூட்டத்தில்,வரும் 20 ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்தும் சமூகநீதி மாநாட்டிற்கு ராகுல்காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,,,

வி.பி சிங் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் கமிசனை நடைமுறைப்படுத்துவதை தடுத்த பாஜக'வின் செயலை மறைமுகமாக ஆதரித்தவர் அன்றைய காங்கிரஸ் தலைவர் ராசீவ் காந்தி,,,

அதையும் தாண்டி,,பெரியார் காலத்தில் பாஜகவிற்கு பதிலாக மிதவாத இந்துத்துவாவாக இருந்து வருவது காங்கிரஸ் என்பது ஊரறிந்த உண்மை,,,,

மேலும் 2009'யில் ஈழத்தமிழரை அழித்தொழித்த காங்கிரஸ் குடும்பத்தின்,அதே வன்மமுடைய அடுத்த வாரிசே ராகுல்காந்தி,,,

அதிலும் தேர்தல் சமயத்தில் திராவிடர் கழகத்தின் இந்த நகர்வை அரசியல் மாநாடாகவே பார்க்க வேண்டியிருக்கிறது,,,

ஆக தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக,,,
வரும் 20 ஆம் தேதி திருச்சி வரும் ராகுல் காந்திக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவிக்கிறது,,,,

-- மனோஜ்

Post a Comment

Powered by Blogger.