Halloween party ideas 2015
.

வேலூர் மாவட்டம் வேலூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட டேவிட் பிஷப் நகரில் சுமார் 150 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர், அணைத்து வீடுகளையும் இடித்து தள்ளுமாறு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதாக, காவல் துறை,வருவாய்துறை, நீதிமன்ற அமீனா கூட்டாக JCB இயந்திரங்களுடன் இடிக்க முயற்ச்சித்தார்கள், தகவல் அறிந்து விடுதலைச் சிறுத்தைகள் களம் இறங்கினோம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டு தருமாறு நீதிமன்றம்  ஆயிரம் ஆனைகள் பிறப்பித்துள்ளது அதற்காக எந்த காவல் துறையும் முனைவதில்லை ஆனால் தனி நபர் தரும் பணத்திற்காக இப்படி வந்துள்ளீர்களே இது தான் உங்கள் கடமையா என கூறி, இங்கிருக்கும் வீடுகளில் ஒரு செங்கள் இடித்தால் கூட கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள் என்றும் கூறிக்கொண்டே வீர வணக்கம் சொல்லிக் கொண்டே முன்னேறினோம், சிறுத்தைகளின் ஆவேச முழக்கத்திற்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் அனைத்து துறைகளும் ஓட்டம் கண்டது,

"இனியும் நாங்கள் ஆடுகள் அல்ல
இலிச்சவாயர் கூட்டமும் அல்ல
சீறிப்பாயும் சிறுத்தைகள் நாங்கள்
திருமாவளவனின் தம்பிகள் நாங்கள்"
- திருமாநம்பி தினேசு

Post a Comment

Powered by Blogger.