Halloween party ideas 2015
.

புலிகளின் வரலாற்றின் மிகச்சிறந்த போராளியாக தம்மை ஒப்புவித்தவர் தமிழினி. ஒரு மாவீரர் குடும்பத்தை சேர்ந்த இரண்டாவது போராளியான தமிழினி போராட்ட தளங்களில் தனக்கென ஒரு முத்திரை பதித்து அரசியல் மட்டுமன்றி பல தளங்களையும் கண்டவர். அப்படிப்பட்ட தமிழினி புலிகளைப்பற்றியும், தலைவரைப்பற்றியும், போராட்ட வரலாறு பற்றியும் கொடுத்துள்ள விமர்சனங்களானது ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல.

தமிழினி எழுதியதாக கூறப்படும் இந்த நூலில் புலிகள் அமைப்பானது தனிப்பட்ட நபரின் அமைப்பாகவே இருந்ததால் அங்கே சுய விருப்பு வெறுப்புகள், சுய முடிவுகள் எடுக்கக் கூடாது என்ற நிர்ப்பந்தம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு பல லட்சம் மக்களோடு புலிகளும் வெளியேற விரும்பியதாகவும் அதை தலைமை ஏற்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை என்ன?
இந்த ஜெயக்குமரன் என்பவர் யார்?

தமிழினி சிறிலங்கா அரசினால் கைது செய்யப்பட்டு மறுவாழ்வு திட்டத்தில் பயிற்சி பெற்ற வேளையில் பல உளவியல் சித்திர வதைகளை செய்திருந்தது. ஆனால் தளராத தமிழினி அதற்கு உடந்தையாக இல்லாமல் இருந்தார். அதாவது தமிழியின் போராட்ட வரலாறு புலிகளின் ரகசியங்கள் போன்றவற்றை வெளியெடுப்பதற்கான நடவடிக்கை எனலாம். அதில் தோற்றுப்போன சிங்கள புலனாய்வு திருமணம் எனும் கதாப்பாத்திரத்தை முன் நிறுத்தியது. மறுவாழ்வு பெற்று வெளியே வந்த தமிழினிக்கு திருமணத்தை நடாத்த முன்னின்றவர் தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவர் ஆனந்தசங்கரி. அவர் புலிகளை விமர்சிக்கும் ஒருவர் அவர் மூலம் சிறிலங்கா காய் நகர்த்தலை மேற்கொண்டது.

திட்டமிட்டு சிறிலங்கா புலனாய்வு நடவடிக்கை செயற்பாடுகளில் செயலாற்றிய மற்றும் தமிழல் விடுதலைக்கூட்டனி கட்சியின் நெருங்கிய சகாவுமான ஜெயக்குமரனை மையமாக வைத்து திருமணத்தை நடாத்தி முடித்தார் ஆனந்த சங்கரி. இதன் பின்னரே தமிழினி மூலம் இரகசியங்கள் வெளியே விடப்பட்டன.

கடைசியாக தமிழினி அக்கா பேசிய போது தான் சிகிச்சை பெற விரும்புவதாகவும், இறுதி நாட்களை ஆதரவற்ற குழந்தைகளை கவனிக்க விரும்புவதாகவும், வெளி நாடுகளில் இருக்கும் நீங்கள் எங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பல தடவை இது பற்றி எங்களோடு பேசியிருக்கிறார். ஆனால் புத்தகம் பற்றிய எந்த விடயங்களையும் அவர் கூற வில்லை. நாங்களும் உதவிகள் வழங்குவதாக ஒப்புக்கொண்டோம். இவ்வாறு இருக்க தலைவரை பற்றியும் கடைசி போராட்டம் பற்றியும் நிறையவே பகிர்ந்து உள்ளோம். இப்படி பட்ட தமிழினி எவ்வாறு இப்படி திரிபான கருத்துக்களை முன் வைத்திருக்க முடியும்.

சிறி லங்காவின் காய் நகர்த்தல் நடவடிக்கையில் உண்மையான கூர்வாளில் கறை படிந்து விட்டது வேதனையே. இது வரை தமிழினியின் கணவர் எங்கள் சந்தேகங்களுக்கு பதில் கொடுக்காமல் தொடர்புகளை துண்டித்து வருவதும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. இதன் உண்மைத் தன்மையை வெளிக்கொணராமல் நாங்களும் ஓயப்போவதில்லை.

பல வேடங்களை கையாண்ட சிறிலங்கா அரசு இதிலும் வெற்றி கண்டுள்ளதாக நினைக்கலாம். ஆனால் புத்தகத்தை வெளியிட அனுமதிக்கும் போதே அந்த பொய் வாளின் வெளிப்பாடு வெளியாகி விட்டது. இன்னும் பல துரோகங்களுக்கு துணை போகும் தமிழ் சமூகத்தை நினைத்தால் வேதனையின் உச்சமே
நன்றி பவித்ரா நந்தகுமார்

Post a Comment

Powered by Blogger.