Halloween party ideas 2015
.

[3/16, 09:12] Tamil Rajendiran: பெரியார் பற்றி தவறாக நினைக்கும் சில ஆத்திகர்களுக்காக..
1) தான் வகித்த 29 பதவிகளை துறந்து பதவிகள் ஏதுமின்றி 40 ஆண்டுகளுக்கு மேலாய் மக்கள் பணியில் ஈடுபட்டவர்

2)செல்வக் குடும்பத்தில் பிறந்தும் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காய் தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை மக்களுக்கே விட்டுச் சென்றவர்.

3)மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை அரசியல் கட்சியாய் மாற்றாதவர், அரசியலில் இல்லாமலே மக்கள் பணி செய்தவர்.

4)விதவை மறுமணத்தை ஆதரித்தவர்.
[3/16, 09:12] Tamil Rajendiran: 5)மனிதன் அனைவரும் சமம் அவனுக்குள் மேல்ஜாதி கீழ்ஜாதி என்ற பிரிவினை இருக்க கூடாது என ஜாதியத்தை கடுமையாய் எதிர்த்தவர்.

6)ஜாதிகள் மதத்தினால் தான் தோன்றுகின்றன எனவே மதத்தை தூக்கி எரிந்தவர்.

7)இல்லாத கடவுளையும் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் சொல்லி,மதங்கள் மனிதர்களை மூடனாக்குகிறது என்பதை உரக்கச் சொன்னவர்.

8)சாதரண லுங்கியையும் சட்டையையும் விரும்பிய எளிமையான பகுத்தறிவுவாதி

9)மக்களுக்கு பிடித்தமான மதத்தை எதிர்த்து மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர். மக்களோடு ஒத்து ஊதி அரசியல் பண்ணத் தெரியாதவர். மக்களுக்கு பிடித்ததை விட தேவையானதை செய்ய முனைந்தவர்.

10) மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என கர்ஜித்தவர்

11)பக்தி வந்தால் புத்தி போய்விடும், புத்தி வந்தால் பக்தி போய்விடும் என தத்துவம் பேசியவர்

12)தம் இயக்கத் தோழர்களை சாதி மறுப்பு-மத மறுப்பு - விதவை மறுமணம் செய்து கொள்ள தூண்டியவர்

[3/16, 09:12] Tamil Rajendiran: 13)பெண்ணுரிமை போராளி,கணவனுக்கு இல்லாமல் மனைவிக்கு மட்டும் ஏன் தாலி எனக் கேட்டு ஆண் சமூகத்தை அதிரச் செய்தவர்

14)பெரியாரிடம் உங்களிடம் எல்லாக் கொள்கையும் பிடித்திருக்கிறது கடவுள் மறுப்பைத் தவிர என சொல்லிய போது, கை நல்லா இருக்கு, கால் நல்லா இருக்கு, மூக்கு முழு எல்லாமே நல்லா இருக்கு உயிர் மட்டும் தான் பிடிக்கவில்லை என சொல்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது என பதலளித்து அவர்களின் வாயை அடைத்தவர்

15) நீ உணரும் பசியை நானும் உணர்கிறேன், அதனால்பசி இருக்கு என ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் நீ உணரும் கடவுளை என்னால்உணர முடியவில்லை என கடவுள் மறுப்புக்கு விளக்கம் சொன்னவர்.
நன்றி அரசு அர்ஜுன்...

Post a Comment

Powered by Blogger.