Halloween party ideas 2015
.

சீமானை இயக்குவது சுப்ரமணியன்சாமி என மூன்று வருடத்திற்கு முன்பாக நான் பதிவிட்டேன் அப்போது யாரும் நம்பவில்லை ...இப்போதாவது புரிகிறதா ?
அரை மணி நேரம் ஐநாவில் என்னை பேசவிடுங்கள் ஈழத்தை பெற்றுத் தந்துவிடுவேன் என சீமான் பேசினாரே ஏன் ?
பேசி பெற வேண்டிய விடுதலைக்காக மேதகுபிரபாகரன் ஏன் போர் நடத்த வேண்டும் என்கிற கேள்வி சீமானின் உரையில் அடங்கியிருக்கிறதா இல்லையா ?
மேதகுபிரபாகரனை எதிர்காலம் வீணாண யுத்தக்காரன் என பதிவு செய்வதே சுப்ரமணியன் சாமியின் நோக்கம் அதை அவர் செய்தால் சந்தேகம் வரும் என்பதனால் ஈழ ஆதரவு களத்தில் இருக்கும் சீமானை சொல்லவைத்தார் இப்போது சொல்லுங்கள் சீமான் சாமியின் அடிப்பொடியா இல்லையா ?
வீட்டில் தமிழ்பேசும் பிராமணர்களும் தமிழர்களே என ஒரு வருடத்திற்கு முன்புவரை பேசாத சீமான் இப்போது அதை பரப்புரை செய்வது ஏன் சுப்ரமணியன் சாமியின் அறிவுறுத்தல் அன்றி வேரென்ன ?
தாமிரபரணி கரையில் தான் மகாபாரதம் நடந்தது என் இல்லாத ஒரு கட்டுக்கதைக்கு வடிவம் கொடுக்க முயலும் சீமான் அப்படி பேசுங்கள் என சாமி சொல்லாமல் பேசுவாரா ?
தமிழ்நாட்டிற்காக உழைத்தவர்களை தொடர்ச்சியாக சீமான் கேவலமாக பேசுகிறாரே அந்த குரை சாமியின் குரல் போல் இருக்கிற்தா இல்லையா ?
தமிழ்நாட்டில் ஆழமாக விதைக்கபட்டிருக்கும் பகுத்தறிவு வேர்களை பகுத்தறிவு பேசிய ஒருவனை வைத்தே வீழ்த்தும் பணிக்கு சுப்ரமணியன்சாமியால் விலைக்கு வாங்கபட்ட நபர்தான் சீமான் என்பதற்கு பல்வேறு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் ....
இப்போதெல்லாம் சுப்ரமணியன்சாமிதான் சீமானுக்கு எல்லாம் என்பதற்கான நன்றிக்கடன் தான் சுப்ரமணியன் என்ற மாற்றுப் பெயர்கொண்ட முருகனுக்கு சீமான் காவடி எடுத்ததும் பால்குடம் எடுத்ததும் நம்பிவந்த சிலரை அலகு குத்த வைத்ததும் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை எல்லாமே கண்முன்னே நடைபெற்ற சம்பவங்கள் தானே ....
சிபிசந்தர்
கருத்தியல் பரப்பு மாநிலத்துணைச் செயலாளர்
விசிக ....

Post a Comment

Powered by Blogger.