Halloween party ideas 2015
.

 சர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டு விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்வதற்கு தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

நாட்டின் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது பூரண நம்பிக்கை வைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியமான நிலை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற தேசிய சட்டப் பேரவையில் கலந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தப் பேரவையில் கலந்து கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தை பலப்படுத்தி பொறுப்புக் கூறல் செயற்பாட்டை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

வெவ்வேறு துறைகள் சம்பந்தமாக பாராளுமன்ற குழுக்கள் நியமித்து நாட்டிற்கு பொறுப்புக் கூறும் பொது ஆட்சியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.

வெளிப்படைத் தன்மையுடைய நிதிக் கொள்கை ஒன்றை ஏற்படுத்துவது அதன் ஒரு நோக்கம் என்றும் பிரதமர் கூறினார்.

(அத தெரண தமிழ்)

Post a Comment

Powered by Blogger.