Halloween party ideas 2015
.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தெறி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சத்யம் தியேட்டரில் நடந்தது.

விழாவில் பேசிய விஜய், ரசிகர்களுக்கு ஒரு குட்டிக்கதை ஒன்று சொன்னார். அதில் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மாவோ என தவறுதலாக கூறினார். ஆனால், ‘மாவோ’ சீனா-வின் முன்னால் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்து வருவதால் இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் விஜய்.

இதுதொடர்பாக விஜய் கூறியுள்ளதாவது, பெரிய மேடைகளில் நாம் சில கருத்துக்களை ரசிகர்களுக்காக சொல்லும் போது இந்த மாதிரியான தவறுகள் நடந்து விடுகிறது. இதற்காக நான் வருந்துகிறேன். மற்றபடி நான் சொன்ன கருத்துக்கள் மக்களை சென்றடையும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள அரச பயஙகரவாத கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்களுக்காக நடிகர் விஜய் அஞ்சலி செலுத்த நடத்திய போராட்டத்தில் " எனது இப்படத்தில் குத்துப்பாட்டு இல்லை என்று நீஙகள் வருத்தப்பட்டீர்கள்... எனது அடுத்தப்படத்தில் குத்தாட்டப்பாட்டு கட்டாயம் இருக்கும் " என்று துக்க நிகழ்வில் நடிகர் விஜய் பேசியது பலருக்கு வருத்தத்தை அளித்தது.. நடிகர் விஜய்க்கு பொது அறிவு கூட இல்லையா என்று சமூக வலைத்தளங்களில் தமிழுணர்வாளர்கள் பலர் கேள்வியெழுப்பினர். இப்பொழுது  சீனாவின் தோழர் மாவோ, இரசியாவின் தோழர் இலெனின் போன்றவர்களை பற்றிய தகவல் கூட தெரியாமல் உள்ள விஜய் உண்மையில் மற்றவர்களிடம் பேசக்கூட வசனகர்த்தா இல்லாமல் பேசக்கூட தெரியாதோ என்று சமூக வலைத்தளங்களில் பலர் எழுதியுள்ளனர்...

Post a Comment

Powered by Blogger.