Halloween party ideas 2015
.

ஈரோடு பெருந்துறை நல்லாம்பட்டியில் அருந்ததியர் பகுதியில் பொங்கல் பண்டிகையில் கலந்து கொண்ட இளைஞர்களை சாதிசொல்லி இழிவுபடுத்தி அடித்துதைத்த கவுண்டர் சாதி மாரப்பன் கூட்டாளிகள் மீது நடவடிக்கை கோரி கொடுத்த புகாரினடிப்படையில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உண்ணாநிலை போராட்டம் நடத்தப்பட்டதால் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் இருதரப்பினரின் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் சின்னச்சாமி என்பவர் இனிமேல் கவுண்டர்களுக்கு கொத்தடிமை முறையில் தப்படிக்க மாட்டோம் எளவு சொல்ல மாட்டோம் குழிவெட்ட மாட்டோம் என தெரிவித்தார் இதுபற்றி தனது மனைவியிடம் நான் வெளியில் சென்றால்  மாரப்ப கவுண்டர் கூட்டாளிகளால் ஏதாவது நடந்துவிடுமோ என பயமாக உள்ளதென சொன்னார்...

நேற்று மாலை 06.45 மணியளவில் வெளியில் சென்றவர் 07.15 மணியளவில் அவர் வேலை செய்யும் கவுண்டரின் கிணற்றில் பிணமாக கிடப்பதாக தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் காவல்துறையினர் பிரேதத்தை மருத்துவமனை கொண்டு செல்வதை  பொதுமக்கள் விடுதலை வேங்கைகள் கட்சி உள்ளிட்ட அமைப்பினருடன் மறியல் செய்து தடுத்தனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்கண்காணிப்பாளர் உறுதியளித்ததனடிப்படையில் சின்னச்சாமி துனைவியாரின் புகாரைப்பெற்று அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலைப்பெறமாட்டோம் என விடுதலைவேங்கைகள் கட்சி தி.வி.க, பி.எஸ்.பி,மண்ணின் மைந்தர்கள்,தலித் விடுதலைக்கட்சி..உள்ளிட்ட இயக்கங்கள் கோவையில் போராட்டம்...
- விடுதலை வேங்கைகள் கட்சி

Post a Comment

Powered by Blogger.