Halloween party ideas 2015
.

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடைபெற்ற அரசியல் சந்திப்பு .

புருச்சல்  ஐரோப்பிய ஒன்றியத்துக்கு  முன்பாக  தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை   கருத்தை முன்வைத்து ஈருருளிப் பயணம்  ஆரம்பித்தது. சமநேரத்தில்  ஐரோப்பிய  கமிஷன்  சிறிலங்காவுக்கான  வெளிவிவகார அதிகாரியுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நேற்று திங்கள் காலை ஒரு மணிநேரத்துக்கு மேலாக கலந்துரையாடல் நடைபெற்றது.


இக் கலந்துரையாடலின்    ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய  அதிகாரி  சிறிலங்கா  பற்றிய  தமது கருத்துக்களை முன்வைத்தார். அதைதொடர்ந்து இக் கலந்துரையாடலில் பங்கேற்றிய ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகள்  சிறிலங்கா அரசு  தொடர்ச்சியாக செய்து வரும் இன அழிப்பை ஆதாரங்களுடன் முன் வைத்ததோடு,  சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்தை   ஏமாற்றும் வகையில்  நல்லாட்சி அரசாங்கம்  முகத்தை காட்டிக்கொண்டு இருப்பதைஎடுத்துக் கூறினர். தொடர்ந்து  ஈழத்தமிழர்களின்  நிலங்கள் மீள் அளிக்கப்படாத சூழலில், ராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில்  தொடர்ந்து நடைபெறுகின்றது என்பதையும்  சுட்டிக்காட்டினர். அத்துடன் செப்டம்பர் 2015 மனிதவுரிமை சபை முன்வைத்த பிரேரணையின் கூற்றுப்  படி சிறிலங்கா அரசாங்கம்  விசாரணையை முன் எடுத்துச்செல்லவில்லை என்பது வலியுறுத்தப்பட்டு இன்று சிறிலங்கா அரசாங்கம் அரசிலமைப்பு  மாற்றம் என்ற விடையத்தை  முன்வைத்து அங்கே வாழும் மக்களின், குறிப்பாக ஈழத்தமிழ் மக்களின்  நல்வாழ்வுக்குரிய செயற்பாடுகளையோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின்      பிரேரணையில் சிறிலங்கா அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  விசாரணையை கூட செய்யாமல் காலத்தை நீடித்து அதை நீர்த்துப்போக வைக்கும் சிங்கள பேரினவாத அரசின் திட்டத்தை    சுட்டிக்காட்டப்பட்டது . 

அத்துடன் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசிய  நாடுகளுக்கு பொறுப்பான பாராளுமன்ற குழு தலைவருடன் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் இன அழிப்பை பல உதாரணங்களுடன் சுட்டிக்காட்டி அதில் முக்கியமாக விவசாய நிலங்களை கொண்ட சாம்பூர் பகுதியில் அனல் மின்நிலையம் நிர்ணயம் பற்றியும் அதன் மூலம் ஏற்படக்கூடிய சுற்றச்சூழ அழிவு பற்றியும் கலந்துரையாடி ஆராயப்பட்டதோடு , சுன்னாகம் பகுதியில் மின்சார உற்பத்திக்கு பாவிக்கப்பட்ட கழிவு எண்ணெய் மூலமாக நீர்நிலைகளின் பாதிப்பு - வருங்காலங்களின் தமிழ் மக்களின் வாழ்வியல் வளங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி பேசப்பட்டது - எமது கூற்றை கேட்டு தமது குழு இந்த விடயத்தில் மிக கவனத்துடன் ஆராய்ந்து அதற்கு தம்மால் முடிந்த நடவெடிக்கைகளை பாராளுமன்றத்திலும் ஐரோப்பிய கமிஷனிடமும் எடுத்துச்செல்வதாக உறுதியளித்தார்.


தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றத்தில் ஓங்கி குரல் கொடுங்கள் - இயக்குனர் புகழேந்தி ஜெனிவா பேரணிக்கு அழைப்பு - காணொளி

https://youtu.be/2-qeGie1_f4

ஐநா மன்றத்துக்கு முன்பாக தமிழ் மக்கள் திரளாக பங்கேற்கவேண்டும் .
நமக்கு நீதி கிடைக்கும் , நாம் தொடர்ந்து போராட வேண்டும் அந்த போராட்டத்தை வலுப்படுத்தும் விதத்தில் உலகத் தமிழ் மக்களின் முழக்கம் உலகின்  எட்டுத்திக்கையும் அதிர வைக்கவேண்டும்  என ஜெனிவா பேரணிக்கு இயக்குனர் புகழேந்தி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் .





--
நன்றி


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்




Post a Comment

Powered by Blogger.