Halloween party ideas 2015
.

துறு  துறுவென பார்க்க  பார்க்க  இனிக்கிறதே.
ஆனால்...  என்ன...  கண்டு  களிக்கையிலேயே
மாயமாய்  மறைந்து  விடுகிறாய்

ஒரு  மரவீடு
கூட்டுக்  குடும்ப  வாழ்க்கை  -  அதில்
குதூகலமாய்  பேசி  கும்மாளம்  அடிக்கிறீர்கள்
அணி அணியாய்  வானில்  பறந்து  திரிகிறீர்கள்
ஓடிப்  பிடித்து  நீங்கள்  விளையாடுவது
ஒய்யாரமாய்த்தான்  இருக்கிறது

எங்கு  சுற்றித்  திரிந்தாலும்
அவ்வப்போது  இளைப்பாற
வீடு  வந்து  சேர்ந்து  விடுகிறீர்கள்
க்ரீச்...  க்ரீச்...  என்று அப்போதும்
விடாமல்  கதைத்துக்  கொண்டே  இருக்கிறீர்கள்
உங்கள்  மொழி  புரியவில்லை  -  ஆனால்
கேட்க  இனிமையாக  இருக்கிறது

சந்தோஷமாகத்தான்  நீங்கள்  கதைத்துக்  கொள்கிறீர்கள்
என்று  தான்  என்  மனம்  சொல்கிறது...

இப்போது சிட்டுக் குருவிகளைக் காண்பது என்பது மிகவும் அபூர்வம்.. நகரில் இருப்பதால் வாகனங்களின் புகையும், இரைச்சலும், ஒரு வித எரிச்சலை மட்டும் தந்து கொண்டிருக்கிறது..அந்த இனிமையான இளமையான, குளுமையான கிராம்ப்புற வாழ்க்கை நினைக்கும்போது ஒவ்வொரு முறையும் சிட்டுக்குருவியும் அதன் காற்றில் ஆடும் அதன் கூடுகளும் நினைவுக்கு வந்து போகின்றன. சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைய, குறைய உணவு உற்பத்தியும் குறையுகிறது. 60 கோடி மொபைல் போன்களுக்கு 5 லட்சம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏற்படும் மைக்ரோ வாய்ஸ் அதிர்வால்   குருவிகள் உயிரிழக்கின்றன.அதீத வளர்ச்சியும் உயிரை காவுவாங்கும் யுக்தியாகத் தான் உள்ளது.
மனிதம் விரும்புவது கடைசியில் அமைதி மட்டுமே,
ஆனால் அமைதிக்கான அனைத்து விடயங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறோம்..அமைதியில்லாமல்..!

உலக சிட்டுக் குருவிகள் தினம்

Viji's palanichamy

Post a Comment

Powered by Blogger.