Halloween party ideas 2015
.

சாதிய நாற்றத்தில் சாக்கடையானது இச்சமூகம்
எங்கே தேடுவேன் மனிதாபிமானம்?
கௌரவக் கொலைகள் அறமான இச்சமூகத்தில்
எப்படி மார்தட்டுவேன் தமிழனென?
மழுங்கிப்போன மார்க்சிய மண்டைகளில்
எங்கே தேடுவேன் புரட்சிக்கான விதையை?
இறப்பவர் இறப்பர், இருப்பவர் இருப்பர்...
விவரங்களை சேகரித்துக் கொள்வோம், இன்னும்
மிச்சமுள்ளன வக்கனை பேச்சுகள் ...
சாதி வெறி, மதவெறி, இனவெறி...
வெறி...வெறி...வெறி...
வெறிபிடித்த மானிடவிலங்கே
இந்த வெறிகளுக்கெதிராக போராடாத நீ  நொடித்துப்போனாலென்ன?
மீண்டும் சொல்கிறேன்...
ஏய், வேடிக்கை பார்க்கும் கூட்டமே..!
எதுவும் தெரியாதென நகர்ந்து செல்லும் கூட்டமே..!
நீங்கள்தான்...  நீங்கள்தான்
நீங்களே ஆபத்தானவர்கள்!
வீழ்ந்து போகட்டும் உமது குலப்பெருமை..!
அழிந்து போகட்டும் உமது அறதர்மம்!
செத்தொழிந்து போகட்டும்..! சாதியும் இச்சமூகமும்..! - புவி

Post a Comment

Powered by Blogger.