Halloween party ideas 2015
.

நன்றி ! நன்றி!  சென்னை கண்ணகி நகர் சிறுவனை  காவல் துறையினர் அடித்து சித்திரவதை செய்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனை  11.03.2016 அன்று 17.03.2016 வரை ராயபேட்டை அரசு மருத்துவமனையிலும், சென்னை ராஜீவ்காந்தி  அரசு மருத்துவமனையிலும் உள்நோயாளியாக அனுமதிக்க மறுக்கின்றார்கள் என்று Whats app இல் பதிவு செய்திருந்தோம். அதன் அடிப்படையில் சமூக ஆர்வலர்கள் பல்வேறு குழுக்களுக்கு அச்செய்தியை அனுப்பியதின் விளைவாகும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் ஐயா அவர்கள்  உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுருத்தியதினாலும் மேலும் மக்கள் கண்காணிப்பகம் சார்பாக உடனடியாக மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் அனுப்பியதின் விளைவாகவும் இன்று முகேஷ் சிறுவன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மனித உரிமை தளத்தில் ஒன்றினைந்து ஒரே அணியில் நின்றோம் எனில் இதுபோன்று வன்முறைகள் தொடராவண்ணம் பாதுகாக்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் இவ்வழக்கு ...நன்றி ! நன்றி !

Post a Comment

Powered by Blogger.