Halloween party ideas 2015
.

சண்டேலீடர் பத்திரிகையாசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலைகளுக்குப் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவுமே இருந்தனர் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலத்தில் நடைபெற்ற இரகசியங்களை அம்பலப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், லசந்த விக்கிரம விக்கிரமதுங்கவின் படுகொலையினை குற்றப்புலனாய்வுப் பிரிவினரே விசாரணை செய்யவேண்டும். அவர் கொலை செய்யப்பட்ட நேரத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பாகவிருந்தார். ஆகையால் அந்நேரத்தில் நடைபெற்ற பல படுகொலைகள் மறைக்கப்பட்டுவிட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலையில் இராணுவத் தரப்பினர் சம்பந்தப்பட்டதாக தற்போது அறியவந்துள்ளது. அவரது கொலையில் இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரி மற்றும் அவரது வாகனம் போன்றவை பயன்படுத்தப்பட்டிருந்தன எனவும் தெரியவந்துள்ளது. இந்தக் குழுவைப்பற்றி நானும் அப்போது கேள்விப்பட்டிருந்தேன் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் எனக்கும் இதற்கும் தொடர்பிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்நது அவர் தெரிவிக்கையில், லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும் எனக்கும் எந்தவொரு சம்பந்தமுமே இல்லை எனவும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் பிரச்சனைகள் இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஒரு குழுவுக்கும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பிரச்சனைகள் இருந்தன. ஆகவே லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு பின்னணியில் மகிந்த ராஜபக்ஷவும் கோத்தபாயராஜபக்ஷவுமே இருந்தனர் எனவும் தெரிவித்தார். இந்த விடயங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவில்லாதபடியால் அவர்கள் விளக்கமில்லாமல் இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மறைக்கப்பட்டதற்கான மற்றொரு காரணியாக அவரது சகோதரர் லால்விக்கிரமதுங்க மகிந்தராஜபக்ஷவின் அடிவருடியாக இருந்தார். உண்மை மறைக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக உள்ளது எனவும்  தெரிவித்துள்ளார்.

சிலர் மகிந்த ராஜபக்ஷவின் அடிவருடிகளாக இருந்துகொண்டு எனக்கெதிராக சாட்சி சொன்னார்கள். இதனால் உண்மைகள் வெளிவருவது மிகவும் குறைவே எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Powered by Blogger.