Halloween party ideas 2015
.


சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வந்த நடிகர் சாய் பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். தொடர் மனவுலைச்சலே இந்த முடிக்கு காரணம் என கடிதமும் எழுதிவைத்துள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த். முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இவர் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவந்தார்.

இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ள நிலையில் நேற்று மாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இவரது நண்பர்கள் மற்றும் போலீசார் கதவை உடைத்து இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன், தன்னுடைய வாழ்வில் தொடர்ந்து வரும் தீராத மனவுலைச்சலே தனது தற்கொலைக்கு காரணமென கடிதம் எழுதிவைத்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகிய இவர் நிரஞ்சனா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

Post a Comment

Powered by Blogger.