Halloween party ideas 2015
.

முன்னாள் போராளியான தமிழினி புற்று நோயால் இறப்பதற்கு முன்னர், தனது விடுதலைப்போர் அனுபவங்களை நூலக தொகுத்ததாக தற்போது உத்தியோகபூர்வமற்ற நிலையில் வெளிவந்து சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

குறித்த இப்புத்தகம் இம்மாதம் 19ம் திகதி கிளிநொச்சியில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவரது கணவரான ஜெயக்குமார் தற்போது மேற்கொண்டுவருகிறார்.

குறித்த நூல் வெளியிட்டுக்கு கிளிநொச்சி காவல்துறைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நூலின் அட்டையில் தமிழினி, விடுதலைப்புலிகளின் சீருடை மற்றும் புலிக்கொடியுடன் இருப்பதன் காரணமாகவே இந்நூல் வெளியீட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அட்டையில் புலிகளின் சீருடை அணிந்து , புலிக்கொடிக்கு பக்கத்தில் உள்ள தமிழினியின் புகைப்படத்தை அகற்றினால் மட்டுமே நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு அனுமதிக்க முடியும் என, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த நூல் , சர்வதேச புத்தக பட்டியல் தொடர் இலக்கம் பெற்றே சட்டபூர்வமாக அச்சிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து, கிளிநொச்சி காவல்துறையினர் சிங்கள ஊடகத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நூலின் அட்டைப்படம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபரின் திணைக்களம் இதுவரை எதுவித பதிலும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் விடுதலைப்புலிகள் படத்தினை மற்றும் கொடியை தாங்கி அச்சிட்டதற்காக, ஜெயக்குமாரை கிளிநொச்சி காவல்துறையினர் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இச் செய்தி வெளியாக காரணம் இப் புத்தகம் தொடர்பில் அனுதாபத்தை பெற்றுக் கொள்வதற்கு என கூறப்படுகிறது. தமிழினி நல்ல போராட்ட வீரர் அவரது கணவரும் தமிழினியுடன் மிக நல்ல ஆறுதலாக இருந்தார் ஆனால் தமிழினியின் இறப்பின் பின் தமிழினியின் கணவரை பாதை மாறி வழி நடத்துவதில் ஒட்டுக் குழுக்கள் மற்றும் புலிகள் அமைப்பில் முன்னர் தம்மை ஒரு தேசிய வாதிகளாக காட்டி தமிழர்களை உணர்சிவசப்படுத்திய ஆசாமிகள் பலர் தமிழினியையும் தமிழர் போராட்டத்தையும் களங்கப் படுத்துவது வேடிக்கையாக உள்ளது.

ஆனால், இப்புத்தக அட்டைப்படம் மாத்திரமன்றி, தமிழினியாலே எழுதப்பட்டது என கூறப்படும் சில விடயங்கள், விடுதலைப்புலிகளின் போராட்டம் பற்றி சர்ச்சையை தோற்றிவித்துள்ளது.

மிக நீண்டகால போராட்ட அனுபவத்தை கொண்ட தமிழினியால் எழுதபட்டதாக குறிப்பிடப்படும் ஒருசில விடயங்களை அடிப்படையாக வைத்து, அதனை திரிபுபடுத்தி, விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவர்கள் , அப்புத்தகத்தை பதிப்பிட்டு, தமது நீண்டகால எதிரியான விடுதலைப்புலிகளின் தலைவரை குறிவைத்தே, அவரை சர்வதிகாரியாக சித்தரிக்கும் பொருட்டே, தமிழினியால் ஒரு கூர்வாளின் நிழலில் நின்று எப்படி வேறுவிதமாக சிந்திக்க முடியும்? என்ற ரீதியில் தலைப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

எனவே புலிகளை பழிவாங்க காத்திருந்தவர்கள், ஜெயக்குமார் ஊடாக வெளியிடுகிறார்கள் என, பலரும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக,தமிழினி இறக்கும் வரை இவ்வித கருத்துக்களையும் வெளிப்படையாக கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Powered by Blogger.