Halloween party ideas 2015
.

புதுக்கோட்டை மாவட்டம் விகடன் மாணவ பத்திரிகையாளர் வினோதா, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள காட்டாத்தி எனும் கிராமத்தில், காதலர்களையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கியதுடன், குடும்பத்தோடு  எரித்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்தபோது, சம்பவத்தை நேரில் பார்த்த வினோதா, செய்தி சேகரிக்க, நடக்கும் சம்பவத்தை கவனித்துக்கொண்டிருந்த அந்த ஊர் இளைஞர்களான விஜயகுமார், பாலகிருஸ்ணன், முத்துவேல் உள்ளிட்ட நபர்கள் அடங்கிய கும்பல் வினோதா மீது தாக்குதல் நடத்தியதில், தக்குதலுக்குள்ளான வினோதா, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் பலமாக அடிக்கப்பட்டுள்ளதால் தொடர்ச்சியாக வாந்தி, மயக்கம் இருக்கிறது. தலையில் ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வளவு நடந்த பிறகும், வினோதா குடும்பத்திற்கு கொலைமிரட்டல் தொடர்கிறது. ஆனால் சம்பவம் நடந்த சிலமணிநேரங்களிலேயே புகார் அளித்தும் கறம்பக்குடி காவல்நிலைய போலீஸார் குற்றவாளிகளை கைது செய்யாமல், விசாரணை கூட நடத்தாமல் இருக்கிறது. இந்த கொலை வெறி தாக்குதலையும் குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையையும் கண்டிப்போம்.

Post a Comment

Powered by Blogger.