Halloween party ideas 2015
.

தமிழர் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு சில கேள்விகள்.
1. நீங்கள் உண்மைமையிலேயே
அயோத்திய தாசர் சிந்தனைகளை
படீத்தீர்களா.
அவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் சாதி பேதமற்ற பூர்வீக திராவிடர்கள் என்று பதிவு செய்யுங்கள் என்று எழுதி உள்ளார்.

ஆனால் நீங்கள் தமிழர் என்று பதிவு செய்யும்படி கடிதம் எழுதினார் என்று சுப.வீ.யுடன் விவாதம் செய்த போது தெரிவித்து இருந்தீர்கள் நான் யூ டியூப்பில் கேட்டு விட்டு சுப.வீ.யுடன் தொடர்பு கொண்டு மணியரசன் சொல்லுவது தவறு அயோத்திய தாசர் அப்படி எழுதவில்லை என்று சொன்னேன் அவரும் அயோத்திய தாசர் சிந்தனைகளை எடுத்து படித்து விட்டு வல்லவன் சொல்லியது சரியாக உள்ளது என்று அயோத்திய தாசர் சிந்தனைகள் தொகுதி ஒன்று பக்கம் 307, 308 இல் திராவிடர் என்று குறிக்கும்படி கடிதம் எழுதினார் என்பதை சுப.வீ. அடுத்த நாளே தன்னுடைய வலைப் பூவில்.பதிவு செய்து உள்ளார் இன்று வரை அப்பதிவு அப்படியே உள்ளது.மேலும் அயோத்திய தாசர் தமிழர்களை குறிக்க அவருடைய சிந்தனைகளில் பல நூற்றுக்கணக்கான இடங்களில் திராவிடர் என்றே குறித்து உள்ளார் என்பதை மறைத்து நீங்கள் இன்று வரை பொய்யாகவே பேசியும் எழுதியும் வருவது ஏன்?.ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மை ஆகிவிடும் என்று கருதியே இதை செய்கிறீர்களா? தோழர்....தொடரும்

-- வாலாசா வல்லவன்

Post a Comment

Powered by Blogger.